

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 44வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி காய்ச்சல் காரணமாக ஆடவில்லை, அதனால் சுரேஷ் ரெய்னா கேப்டன்ஷிப் பொறுப்பில் விளையாடுகிறார்.
டாஸ் வென்ற ரெய்னா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். முரளி விஜய் தன் முதல் போட்டியில் ஆடுகிறார். வாட்சனுடன் தொடக்கத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பதி ராயுடு விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார்.
சிஎஸ்கே அணி வருமாறு:
முரளி விஜய், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, துருவ் ஷோரி, மிட்செல் சாண்ட்னர், டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக், எவின் லூயிஸ், கெய்ரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியா, குருணால், சூர்யகுமார் யாதவ், அனுகுல் ராய், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, லஷித் மலிங்கா