Last Updated : 05 Apr, 2019 05:06 PM

 

Published : 05 Apr 2019 05:06 PM
Last Updated : 05 Apr 2019 05:06 PM

சன் ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக பிட்ச் தயாரிக்கப்பட்டதா?.. மோசமான பிட்ச்: டெல்லி கேப்பிடல்ஸ் கோச் பாண்டிங் தாக்கு

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 129 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் கோபத்தைக் கிளறியுள்ளது.

 

பிட்ச் தயாரிப்பாளர்கள் ஒன்றைக் கூறுகின்றனர் அங்கு சென்றால் நடப்பதே வேறாக இருக்கிறது, இது போன்ற மோசமான பிட்சை பார்த்ததிலல்லை என்று பாண்டிங் கடுமையாகத் தாக்கினார்.

 

சன் ரைசர்ஸ் அணி மிக எளிதாக இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

 

பிட்ச் எங்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று கூறுவது நியாயமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.  முதலில் பிட்ச் தயாரிப்பாளர்களிடம் பேசும்போது பெஸ்ட் பிட்ச் என்றனர் ஆனால் அதுவே இதுவரை காணாத வொர்ஸ்ட் பிட்ச் ஆகிவிட்டது. எவ்வளவு குறைவாக பவுன்ஸ் ஆனது, எவ்வளவு மந்தமாக இருந்தது என்பதை நீங்களே பார்த்தீர்கள்.

 

கடைசியில் இரு அணிகளுக்கும் இதே பிட்ச்தானே என்று கூறலாம்... ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் என்னைக் கேட்டால், நான் இந்தப் பிட்சில் சன்ரைசர்சை எதிர்கொள்ள விரும்பியிருப்பேனா என்பதுதான் விஷயம். சன் ரைசர்ஸ் அணியுடன் வேறு வித்தியாசமான பிட்ச்களில் ஆட முடியாதா? (சிரித்தபடியே பாண்டிங் கேட்டாலும் பின்னால் வெறுப்பு இருந்தது தெரிந்தது)

 

சன் ரைசர்ஸுக்கு சாதகமாக பிட்ச் அமைந்தது, அவர்களிடம் பெரிய ஸ்பின்னர்கள் இருந்தனர், அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் மெதுவாக வீசினர். இந்தப் பிட்சில் ஸ்லோயர் பந்துகளை வீசினால் அது ஏறக்குறைய அடிக்க முடியாத பந்துகள்தான்.

 

பிட்ச் இப்படித்தான் இருக்கப் போகிறது என்றால் நாங்கள் அணிச்சேர்க்கையை மாற்றித்தான் ஆகவேண்டும். எங்கள் பவுலர்கள் இந்தப் பிட்சுக்கு பொருந்த மாட்டார்கள். பிட்சை இப்படிப் போட்டால் இஷாந்த் சர்மா, ரபாடாவை போட்டிகளில் சேர்ப்பதே வேஸ்ட்தான்.

 

ஆனாலும் இது எங்கள் ஹோம் பிட்ச், மற்ற அணிகளை விட நாங்கள்தான் சிறப்பாக இங்கு ஆட வேண்டும். 3 போட்டிகளில் 2 போட்டிகள் எதிரணியினர்தான் சிறப்பாக ஆடினர். ஆகவே முன்னேற்றம் வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற பாடுபடுவோம்.

 

இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x