Published : 20 Apr 2019 12:18 PM
Last Updated : 20 Apr 2019 12:18 PM

என்கிட்ட நடக்குமா? - நரேனிடம் மன்கட் அவுட்டை கிண்டல் செய்த கோலி: சுவாரஸ்ய சம்பவம்

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில், மன்கட் அவுட் செய்யவந்த கொல்கத்தா வீரர் சுனில் நரேனிடம் பேட்டை கிரீசுக்குள் வைத்து கோலி விளையாடியது நேற்று சுவாரஸ்ய சம்பவமாக அமைந்தது.

இந்த ஐபிஎல் சீசனில் மறக்க முடியாத நிகழ்வு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் அவுட் செய்ததாகும். அந்த சம்பவம் விதிமுறையின்படி சரியானதாக இருந்தாலும், ஸ்பிரிட் ஆப்தி கிரிக்கெட் படி அது பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன்பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை வீர்ர குர்னல் பாண்டியா பந்துவீசுவதற்குள் பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் கிரீஸை விட்டு நகர்ந்துவிட்டார். அதைப் பார்த்த குர்னல்  பாண்டியா அவரை மன்கட் அவுட் செய்யாமல், எச்சரித்து கிரீஸுக்குள் நிற்குமாறு கூறி ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டை நினைவுப்படுத்தினார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்திலும் நேற்றை மன்கட் அவுட் சம்பவம் நடக்க முயன்றபோது அதை ஆர்சிபி கேப்டன் விராட் கோலி நகைச்சுவையாகக் கையாண்டு சூழலை மாற்றி அமைத்தார்.

18-வது ஓவரை கொல்கத்தா அணியின் நரேன் வீசினார். அந்த ஓவரை ஸ்டோனிஸ் எதிர்கொண்டார். மறுமுனையில் விராட் கோலி நின்றிருந்தார். பந்துவீசுவதற்கு வேகமாக வந்த சுனில் நரேன், பந்துவீசாமல் திடீரென கிரீஸ் அருகே வந்ததும் நின்றுவிட்டு, திரும்பிப்பார்த்தார்.

ஆனால், வீராட்கோலி, கிரீஸை விட்டு நகராமல், கிரீஸில் பேட் வைத்தவாறு நின்றிருந்தார். உடனே மன்கட் அவுட் முறையை கிண்டல் செய்யும் வகையில் கீரீஸுக்குள் பேட்டை வைத்து அமர்ந்து கோலி கிண்டல் செய்தது அனைவரையும் ரசிக்கச் செய்தது.

சுனில் நரேனும், விராட் கோலியும் ஒருவொருக்கு ஒருவர் தட்டிக்கொடுத்து சிரித்துச் சென்றனர் நடுவரும் இவர்கள் சிரிப்பதைப் பார்த்து சிரித்தார்.

கடை ஓவர் என்பதால், மிகுந்த பரபரப்பாக ஆட்டம் சென்ற சூழலில் அனைத்து வீரர்களும் பதற்றத்துடன் இருந்தனர். அந்த நேரத்தில் விராட் கோலி இதுபோன்று நகைச்சுவையான செயல்களைச் செய்து இறுக்கமான சூழலை மாற்றிவிட்டார்.

இந்த வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தங்களின் இணையதளத்தில் பகிர்ந்துள்ளது. அனைவராலும் இந்த வீடியோ லைக் செய்யப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x