

ஹைதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 33வது போட்டியில் சென்னை அணியில் இன்று கேப்டன் தோனி ஆடவில்லை, அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பு வகிக்கிறார்.
ரெய்னா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார். சன் ரைசர்ஸ் பவுலிங் செய்யவுள்ளது.
முதுகுத் தசைப் பிடிப்பு காரணமாக தோனி இன்று விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராகச் செயலாற்றுவார். 2010-க்குப் பிறகு தோனி கேப்டனாக இல்லாமல் சிஎஸ்கே ஆடுகிறது. ரெய்னா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.
சென்னை அணி வருமாறு:
டுபிளெசிஸ், ஷேன் வாட்சன், ரெய்னா (கேப்டன்), அம்பதி ராயுடு, சாம்பில்லிங்ஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, கரண் சர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், இம்ரான் தாஹிர்.
ஹைதராபாத் அணி:
டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், யூசுப் பத்தான், தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமெட், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம்.