Published : 05 Apr 2019 09:05 PM
Last Updated : 05 Apr 2019 09:05 PM

கோலி அரைசதம்: சாதனை மன்னனின் இன்னொரு மைல்கல்; டி20யில் 8000 ரன்கள்

பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 17ம் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் ஆர்சிபி அணியில் கேப்டன் விராட் கோலி இந்த ஐபிஎல்-ன் தன் முதல் அரைசதத்தை அடித்தார்.

 

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சோபிக்காமல் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்த விராட் கோலி இன்று பேட்டிங் பிட்சில் வெளுத்து வாங்கி வருகிறார். 34 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அவர் 55 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

 

இன்றைய இன்னிங்சிற்கு முன்பாக 8,000 ரன்களுக்கு 17 ரன்கள் குறைவாக இருந்தார் கோலி. ஆனால் இன்று இறங்கி 10வது பந்தில் சாதனை மன்னன் விராட் இன்னொரு மைல்கல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

 

டி20-யில் 8,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் சுரேஷ் ரெய்னா இவர் 306 போட்டிகளில் 8,110 ரன்களை எடுக்க விராட் கோலி 257 போட்டிகளிலேயெ 8001 ரன்கள் என்று சாதனையை நிகழ்த்தினார்.

 

இவருக்கு அடுத்ததாக 8000 ரன்களை எடுக்கும் நிலையில் ரோஹித் சர்மா 7,902 ரன்களில் உள்ளார், ஷிகர் தவண் 6548 ரன்களையும் கம்பீர் 6,402 ரன்களையும் எடுத்த் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 124/1 என்று பிரமாதமாக ஆடி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x