Published : 29 Apr 2019 07:30 PM
Last Updated : 29 Apr 2019 07:30 PM

உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டி எங்கள் ‘ரோல்’ என்னவென்றே விளக்கவில்லை: குறைதீர்ப்பாளருக்கு விவிஎஸ். லஷ்மண் காட்டமான கடிதம்

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விவகாரத்தில் கங்குலி, லஷ்மண், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு குறைத்தீர்ப்பாளர் மற்றும் அறவியல் அதிகாரி நோட்டீஸ் அனுப்ப சச்சின் பதில் அளித்தார், ஆனால் லஷ்மண் தன் ஆத்திரத்தைக் கொட்டி குறைத்தீர்ப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதாவது விநோத் ராய் தலைமை கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி இதுவரை எங்களுடைய பொறுப்புகள் என்னவென்பதையே தெரிவிக்கவில்லை இங்கு எப்படி ‘ஆதாயம் தரும் இரட்டைப் பதவி’ விவகாரம் எழுகிறது என்று கூறி கடிதம் எழுதியுள்ளார்.

 

“டிசம்பர் 7, 2018-ல் நாங்கள் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் கமிட்டிக்கு கடிதம் எழுதினோம், அதில் எங்கள் பொறுப்புகள் மற்றும் பணி என்ன என்பதை விளக்குமாறு கேட்டிருந்தோம். இன்று வரை அதற்கு ஒரு பதிலு இல்லை.  பதவிக்காலம் பற்றி எந்த ஒரு கெடுவும் இல்லாத நிலையில் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி இன்னும் இருக்கிறதா என்பது பற்றிக் கூட எங்களுக்கு எந்த வித தொடர்பும் படுத்தவில்லை.

 

உறுப்பினராக நான் சேர ஒப்புக் கொண்டது இந்திய கிரிக்கெட்டின் நீண்ட வளர்ச்சியை நோக்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கவே எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

இந்திய அணி கிரிக்கெட் சூப்பர் பவராக வளர்ச்சியடைவதில் ஓய்வு பெற்ற பிறகு எனக்கான ஒரு முன்னுரிமையாகக் கருதி இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோமே தவிர பணத்துக்காக அல்ல, நான் என் சம்பளத்தைக் கூட கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் வேண்டாம் என்று உதறினேன்.

 

எனவே புகார்தாராரின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. நாங்கள் அணித்தேர்வாளர்கள் அல்ல. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியும் நிரந்தர அமைப்பு கிடையாது

 

2015-ல் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு தேசிய அணியின் வெளிநாட்டு ஆட்டத்திறனை வலர்ப்பது, அண்டர்-19 முதல் இந்தியா ஏ, சர்வதேச அணிக்கு புதிய, இளம் விரர்களை கொண்டு செல்ல பாதை அமைத்துக் கொடுப்பது, வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையைக் குறைபது, இந்திய ஸ்பின்னர்களின் தரத்தை உயர்த்துவது ஆகியவையாகும்

 

ஆனால் இதற்கெல்லாம் எங்களில் ஒருவரைக் கூட அழைக்கவில்லை, பயிற்சியாளர் தேர்வுகளுக்கு மட்டும்தான் ஆலோசனை கேட்டனர். இதுவும் ரெகுலரான ஒரு நடைமுறையாக இருக்கவிலை, நான் எந்தவிதத்திலும் என்னைத் தேர்வாளராகக் கருதவில்லை

 

டிசம்பர் 2018-ல் இந்திய மகளிர் அணி பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க எங்களது வருகைக்காக 24 மணிநேரம் அவகாசம் அளித்தனர். நாங்கள் மூவரும் (சச்சின், லஷ்மண், கங்குலி) எங்களால் வர இயலாததை தெரிவித்தோம். காரணம் கால அவகாசம் குறுகிய கால அவகாசம் என்பதே.

 

ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்ற பிரிவை, நாங்கள் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக புறக்காரணிகளினால் உந்தப்படுகிறோமா, செல்வாக்குச் செலுத்தப்படுகிறோமா என்ற ரீதியில் குறைத்தீர்ப்பு அதிகாரி பார்க்க வேண்டும்.

 

இந்த நோட்டீஸ் வரும் வரை கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறதா என்பதே எனக்கு தெரியவில்லை, காரணம் இது பற்றி எந்த விதமான கம்யூனிகேஷனும் எனக்கு இல்லை. ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இங்கு எழவே வாய்ப்பில்லை” என்று லஷ்மண் கொட்டித் தீர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x