Published : 01 Apr 2019 12:01 pm

Updated : 01 Apr 2019 12:02 pm

 

Published : 01 Apr 2019 12:01 PM
Last Updated : 01 Apr 2019 12:02 PM

தல மேட்ச்ல அடி வெளுக்க: சிஎஸ்கே வெற்றியை சூப்பர் டீலக்ஸ் வசனத்துடன் கொண்டாடிய ஹர்பஜன்

ராஜஸ்தானுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அடைந்த வெற்றியை 'சூப்பர் டீலக்ஸ்' வசனத்துடன் கொண்டாடி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

தோனியின் பிரமாதமான பேட்டிங் மற்றும் கடைசி ஓவரில் பிராவோவின் சிறப்பான பந்துவீச்சால் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி, பிராவோ, தாஹிர் ஆகியோருக்கும் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரு நாள் ஒரு டீமை ஏழு டீம் துரத்த அந்த டீம் தடையைத் தாண்டி @msdhoni புடிச்சி தொங்க ,அந்த #தல மேட்ச்ல அடி வெளுக்க, என்னடா இழவு வாழ்க்கைன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேட்ச்சாவதுன்னு, கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜி'' என்று பதிவிட்டுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    சென்னை சூப்பர் கிங்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை தோனி பிராவோ சூப்பர் டீலக்ஸ்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author