

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கும் சமஅளவில் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கணித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 14 முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் சேப்பல் கூறியிருப்பது:
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சமபலத்துடன் உள்ளன. அந்த அணிகளில் தலைமை வலுவாக உள்ளது. எனவே இந்த மூன்று அணிகளில் ஒன்று கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணி கணிக்க முடியாத அணியாக உள்ளது. அவர்கள் எதிர்பாராத வெற்றிகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். 50 ஓவர் போட்டியில் தோனி மிகச் சிறந்த கேப்டன் என்றார்.