Published : 17 Apr 2019 04:02 PM
Last Updated : 17 Apr 2019 04:02 PM

ஷாகித் அஃப்ரீடியின் அனைத்து கால சிறந்த உலகக்கோப்பை அணியில் சச்சின், லாரா, முரளிதரன் இல்லை: கோலி உண்டு

பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அஃப்ரிடி தனது தேர்வாக சிறந்த உலகக்கோப்பை அணியைத் தேர்வு செய்துள்ளார். அதில் இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இடமில்லை.

 

அதே போல் பிரையன் லாராவுக்கு இடமில்லை, உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் முரளிதரனுக்கு இடமில்லை.

 

சச்சின் டெண்டுல்கர் 1992, 96, 99, 2003, 2007, 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் ஆடி பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.  உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் எடுத்த ரன்கள் 2,278.  இந்த ரன்களுக்கு அருகில் கூட எவரும் இல்லை. சராசரி 56.95.  உலகக்கோப்பையில் மட்டும் 6 சதங்கள், 15 அரைசதங்கள் அடித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

 

2003 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவில் சச்சின் டெண்டுல்கர் எந்த வித நெட் பிராக்டீசும் செய்யாமலேயே 673 ரன்களை குவித்தார். இதுதான் உலகக்கோப்பை ஒன்றில் எடுக்கப்பட்ட இதுவரையிலான அதிகபட்ச தனிநபர் ரன்களாகும். ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஷாகித் அஃப்ரீடியில் ஆல்டைம் உலகக்கோப்பை அணியில் இல்லை, 2011, 2015 உலகக்கோப்பையில் ஆடிய விராட் கோலி இதில் இடம்பெற்றுள்ளார். மற்றபடி கில்கிறிஸ்ட், பாண்டிங், இன்சமாம் உல் ஹக், காலிஸ் ஆகியோர் உள்ளனர்.

 

ஷாகித் அஃப்ரீடியின் அனைத்துகால சிறந்த உலகக்கோப்பை அணி வருமாறு:

சயீத் அன்வர், கில்கிறிஸ்ட், பாண்டிங், விராட் கோலி, இன்சமாம் உல் ஹக், காலிஸ், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், ஷோயப் அக்தர், சக்லைன் முஷ்டாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x