சிஎஸ்கே அணியில் 3 மாற்றம்; கிங்ஸ் லெவனில் மீண்டும்கெய்ல், டை : சிஎஸ்கே முதலில் பேட்டிங்

சிஎஸ்கே அணியில் 3 மாற்றம்; கிங்ஸ் லெவனில் மீண்டும்கெய்ல், டை : சிஎஸ்கே முதலில் பேட்டிங்
Updated on
1 min read

சென்னையில் நடைபெறும் 18வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளார்.

சென்னை அணியில்  3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, டுபிளெஸிஸ், ஸ்காட் குக்கலீய்ன் (ஐபிஎல் அறிமுகப் போட்டி) ஹர்பஜன் சிங் ஆகியோர் வந்துள்ளனர்.  காயமடைந்த டிவைன் பிராவோ, ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா ஆகியோர் பெஞ்ச்சில்.

கிங்ஸ் லெவன் அணியில் கிறிஸ் கெய்ல், பவுலர் ஆண்ட்ரூ டை மீண்டும் வந்துள்ளனர். கடந்த போட்டி ஹாட்ரிக் நாயகன் சாம் கரனும் அணியில் இருக்கிறார். இன்னொரு அபாய லெக்ஸ்பின்னர்  முஜிப் உர் ரஹ்மான் இல்லை!!

டாஸ் வென்ற தோனி, “பிட்ச் தொடக்கத்தில் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும். கிரவுண்ட்ஸ்மென் நல்ல பணியாற்றியுள்ளனர், நாங்கள் ஆடிய 4 பிட்ச்களில்  இந்தப் பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமாக போடப்பட்டுள்ளது. மற்ற பிட்ச்கள் மந்தமாக இருந்தன.

அஸ்வின் கூறும்போது, ‘நாங்களும் பேட்டிங்தான் செய்திருப்போம், பிட்ச் ஹார்டாக உள்ளது முழுதும் இப்படியே இருந்தால் நல்லது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in