நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி

நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
Updated on
1 min read

உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இந்திய கேப்டன் விராட் கோலி அணியில் தோனியின் இடமும் இருப்பும் பற்றி தெரிவித்துள்ளார்.

தோனி பற்றி அவர் கூறியதாவது:

நான் என் ஆரம்ப காலக்கட்டங்களில் அணியில் நிலைபெற கொஞ்சம் தடுமாறிய போது கேப்டனாக இருந்த தோனி நான் வளர்ச்சியடைவதற்கு கொஞ்சம் இடம் கொடுத்தார். அதற்கு நான் நன்றிக் கடன் பட்டவனாகிறேன், நன்றிக்கடன் மட்டுமல்ல அவர் அணியில் நீடிக்க அத்தனை தகுதிகளையும் தன்னிடத்தே கொண்டவர் என்பதே முதற்காரணம்.

என்னைப் பொறுத்தவரை நன்றி விசுவாசம் மிக முக்கியமானது. நான் அணியில் நுழைந்து சில போட்டிகள் ஆன பிறகு அவர் என்னைத் தவிர பிற பேட்ஸ்மென்களை முயன்றிருக்கலாம். நான் என் வாய்ப்புகளைச் சரியாகப் பற்றிக் கொண்டேன் என்றாலும் நான் என் ஆட்டத்தைப் புரிந்து கொண்டு அணியின் தேவைகளுக்கு ஏற்ப ஆட எனக்கு தோனி அவகாசம் அளித்தார்.

இத்தகைய விஷயங்கள் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகும். ஏனெனில் நான் அணிக்குள் வந்த காலக்கட்டம் அத்தகையது.  அவரும் ஒரு காலக்கட்டத்தில் தன் ஆட்டத்தில் கொஞ்சம் அதிக வேலை செய்ய வேண்டியிருந்தால் அதற்கான மரியாதையை அவருக்கு வழங்க வேண்டும்.  அந்த மரியாதைக்கு உரியவர் தோனி என்ற முறைதானே தவிர நான் ஏதோ அவருக்கு பரிசளித்து விட்டேன் என்று கூறலாகாது.

நாட்டுக்காக அவர் செய்ததைப் பாருங்கள், அந்த இடம் அவருக்கு உரித்தாக அவர் தகுதியானவரே. எனவே மக்கள் அந்த மாதிரி அவரைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் கூற வேண்டியுள்ளது.

நாம் ஏதோ அவருக்கு பரிசளிக்கிறோ என்பதல்ல இது, தன் வாழ்வில், கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் புத்திசாலிதான் அவர். அவருக்கான வெளியை நாம் வழங்க வேண்டும்.

இப்போது ‘உலகக்கோப்பை அணியின் முக்கிய அங்கம் தோனி’ என்று உணர்ந்து கொண்டனர், இது உண்மைதான்.

இவ்வாறு கூறினார்  விராட் கோலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in