தன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரியாவிடை: ஷேன் வாட்சன் திடீர் முடிவு

தன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரியாவிடை: ஷேன் வாட்சன் திடீர் முடிவு
Updated on
1 min read

2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுடன் தனக்கு இருந்த பிக்பாஷ் லீக் உறவையும் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 லீகான புகழ்பெற்ற பிக்பாஷில் சிட்னி தண்டர் அணிக்காக வாட்சன் ஆடிவந்தார். இந்நிலையில் பிக்பாஷ் லீகிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.

4 ஆண்டுகளுக்கு முன்பாக சிட்னி தண்டர் அணியில் சேர்ந்தார் வாட்சன். முன்னதாக சிட்னி சிக்சர்ஸ், பிரிஸ்பன் ஹீட் ஆகிய அணிகளுக்கும் வாட்சன் ஆடிவந்தார். ஆனால் சிட்னி தண்டருக்குத்தான் அதிக போட்டிகளில் ஆடியுள்ளார்.

தண்டர் அணியுடன் 2 ஆண்டுகால ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது, ஆனால் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சிட்னி தண்டர்ஸ், பிக்பாஷ் லீக் நிர்வாகிகள், சகவீரர்கள் ஆகியோருக்கு தன் ‘இருதயபூர்வ’ நன்றிகளைத் தெரிவித்து டாடா காட்டியுள்ளார் ஷேன் வாட்சன். 

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் கீழ் ஆடிவரும் வாட்சன் தொடர்ந்து வெளிநாட்டு டி20 லீகுகளில் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in