Published : 06 Apr 2019 07:02 PM
Last Updated : 06 Apr 2019 07:02 PM

இம்ரான் தாஹிர் பந்தில் அவுட்டுக்கு டி.ஆர்.எஸ். முறையீடு செய்யாமல் விட்ட தோனி: சர்பராஸ் கான் ‘எஸ்கேப்’

பொதுவாக டி.ஆர்.எஸ் ரிவியூ செய்வதில் துல்லியமாகக் கணிக்கக் கூடியவர்களில் ஒருவர் எம்.எஸ்.தோனியும் ஆவார். அவர் ரிவியூ கேட்டால் அது அவுட்டாக இருக்கும், கேட்கவில்லையென்றால் அது நாட் அவுட்டாகவே இருக்கும் பெரும்பாலும்.

 

ஆனால் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இம்ரான் தாஹிர் பந்தில் கிங்ஸ் லெவன் வீரர் சர்பராஸ் கான் கூக்ளியை கால்காப்பில் வாங்க மிகப்பெரிய அப்பீல் செய்தார் தாஹிர்.

 

முதலில் கால்காப்பைப் பந்து தாக்கியது. பந்து ஒருவேளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவா அல்லது லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்கிறதா என்ற ஐயம் இருந்தது, ஆனால் இம்ரான் தாஹிர் ரிவியூ செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்.

 

தோனி ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுத்தார், ஆனால் ரீப்ளேயில் 3 ரெட்கள் காட்டியது, அதாவது அது எல்.பி. அவுட்.  தோனி இதை எப்படி தவறாக கணித்தார் என்று தெரியவில்லை, பொதுவாக துல்லியமாக கணிப்பார் தோனி.  தப்பினார் சர்பராஸ் கான்.

 

இம்முறை சர்பராஸ் கான், ராகுல் கிட்டத்தட்ட ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வருகின்றனர். சர்பராஸ் கான் அந்த எல்.பி. அவுட் கேட்காத தருணத்தில் 16 ரன்களில் இருந்தார் கிங்ஸ் லெவன் 49/2 என்று இருந்தது, தற்போது 75/2 என்று வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் கடைசி வரை சொல்ல முடியாது என்றாலும் தோனி இந்த ரிவியூவை வேண்டாம் என்று விட்டது ஒருவேளை ஆட்டத்தின் முடிவை பாதிக்கலாம் என்று தெரிகிறது.

 

முன்னதாக கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வாலை ஹர்பஜன் ஒரே ஓவரில் வீழ்த்த 7/2 என்று பஞ்சாப் மோசமாகத் தொடங்கியது.  சர்பராஸ் எல்.பிக்கும் ரிவியூ கேட்டு அவுட் ஆகியிருந்தால் 49/3 என்று கிங்ஸ் லெவனுக்கு மேலும் கடினமாகியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x