

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை)கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்தை தமிழக மக்களுக்குத் தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் சிஎஸ்கே வீரர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதுவும் வீரர்கள் அனைவரும் தமிழில் அவர்களைக் குறிக்கும் செல்லப் பெயர்களை எழுதி, சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பிராவோ, வாட்சன், ரெய்னா, சாண்ட்னர், மோகித் சர்மா, விஜய், பாலாஜி உளிட்ட பலரும் தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.