எனக்கு ‘ரன் அவுட்’ கொடுத்தது தவறுதான், பந்தை ரிலீஸ் செய்வது போல் வந்த அஸ்வின் வீசவில்லை: பட்லர் குற்றச்சாட்டு

எனக்கு ‘ரன் அவுட்’ கொடுத்தது தவறுதான், பந்தை ரிலீஸ் செய்வது போல் வந்த அஸ்வின் வீசவில்லை: பட்லர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் கிரிக்கெட் உலகை இரண்டாகப் பிளந்த விவாதத்துக்குக் காரணமானார் அஸ்வின், ஜோஸ் பட்லரை மன்கட் அவுட் செய்தார் அவர்.

அதாவது ரன்னர் முனையில் பேட்ஸ்மென்கள் ரன்களை விரைவில் எடுப்பதற்காக சில வீரர்கள் வேகமாக பவுலர் ஆக்‌ஷனுக்கு வரும் முன்பே கிரீசை விட்டுக் கிளம்புவார்கள் இதுவும் ஸ்பிரிட் ஆஃப் த கேம் கிடையாது, ஆனால் அப்படி அவர் ரன் எடுக்கும் முனைப்பில் கிரீசைக் கடந்து சென்றால் எச்சரிக்கை செய்து ரன் அவுட் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளில் இல்லை, ஆனால் பொதுவாக எச்சரிக்கை செய்வது என்பது நடைமுறை, இது ஸ்பிரிட் என்று கருதப்படுகிறது.

ஆனால் அன்று ஜோஸ் பட்லர் முழு ஆக்‌ஷனுக்கு அஸ்வின் வரும்போது  கிரீசில்தான் இருந்தார், இதனையடுத்து பவுலர் பந்தை வீசுவார் என்றே எந்த பேட்ஸ்மெனும் நம்புவார்கள், ஆனால் அஸ்வின் நிதானமாக அவர் வெளியே  வரும் வரை காத்திருந்து ஸ்டம்பைத் தட்டினார் என்கிறார் ஜோஸ் பட்லர்.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

“மன்கட் அவுட் முறை கிரிக்கெட் விதிமுறைகளில் அவசியமே. ஏனெனில் பேட்ஸ்மென்க்ள் பந்து வீசுவதற்கு முன்பாகவே குடுகுடுவென்று பாதி பிட்ச் வரை ஓடக் கூடாது.

ஆனால் இந்த விதிமுறையில் கோளாறுகள் இல்லாமலில்லை.  ‘அதாவது பவுலர் பந்தை ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கும் போது’ என்று உள்ளது, இது சரியான கூற்றல்ல

நீங்கள் ரீப்ளேயைப் பாருங்கள், அப்போது எனக்கு அவுட் கொடுத்தது தவறான தீர்ப்பு என்பது தெரியவரும். ஏனெனில் ‘பந்தை வீசுவார் என்று எதிர்பார்க்கும் தருணத்தில்’ நான் கிரீசிற்குள்தான் இருந்தேன். ஆகவே எனக்கு எப்படி அவுட் தர முடியும்? மேலும் அஸ்வின் ஆக்‌ஷனுக்கு வந்து விட்டு வீசுவார் என்று எதிர்பார்க்கும் கட்டத்தைத் தாண்டி வீசுவார் என்று நான் எதிர்பார்த்து கிரீசை விட்டுக் கிளம்பும்போது அவர் ஆக்‌ஷனை நிறுத்தி விட்டு ரன் அவுட் செய்கிறார்.

இது உண்மையில் மிகுந்த ஏமாற்றமளித்தது.  அஸ்வின் அதனை நடத்திய பாணி எனக்கு உவப்பானதாக இல்லை. ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது அது தவறான முன்னுதாரணமானது.  ஒரு தொடர் இப்படித் தொடங்குவது ஏமாற்றமளிக்கிறது.

அப்படிச் செய்ததால் என்ன ஆயிற்று என்றால் அடுத்த 2 போட்டிகளில் நான் இதையே நினைத்து இன்னும் உஷாராக இருப்பதில் கவனம் செலுத்தியதால் என் கவனம் சிதறியது. நான் தான் இருமுறை மன்கட் ஆகியிருக்கிறேன் போலிருக்கிறது.

இவ்வாறு கூறினார் பட்லர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in