

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இடம் பெறாமல் இருந்த சஹிப் அல் ஹசசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், துணைக் கேப்டன் மஷ்ரபி மோர்தசா, ஆல்ரவுண்டர் மோசடக் ஹூசைன், டெஸ்ட் போட்டியில் மட்டும் இடம் பெற்று வந்த அபு ஜயத் அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டி வரும் மே 30-ம் தேதி முதல் இங்கிலாந்தில் தொடங்குகிறது. வங்கதேச அணி இதற்கு முன் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் சிக்ஸ் பிரிவைத் தாண்டியதில்லை என்கிறபோதிலும் சிறிய அணி என்று மதிப்பிட்ட ஜாம்பவான் அணிகளை எல்லாம் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்யும் வலிமை கொண்டது.
ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை உலகக் கோப்பையில் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்யும் அளவுக்கு இளம், திறமையான வீரர்கள் நிறைந்த அணி வங்கதேசம்.
இதில் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இடம் பெறாமல் இருந்த அனுபவம் வாய்ந்த சகிப் அல் ஹசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது வலிமையாகும், துணைக் கேப்டன் மஷ்ரபி மோர்தசா, ஆல்ரவுண்டர் மோசடக் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்றுவந்த ஜெயத் ஒருநாள் அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடரின் போது காயத்தால் நீக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அகமது அணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும், மூத்த வீரர்கள் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம், மஷ்ரபி மோர்தசா, மெகமதுல்லா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதுதவிர 25 வயதுக்குற்பட்ட இளம் வீரர்களான லிட்டன் தாஸ், மெகதி ஹசன் மிராஸ், முகமது சைபுதீன், முஸ்தபிசுர் ரஹ்மன், சவுமியா சர்க்கார், ஜயத் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் தவிர நயிம் ஹசன், யாசிர் அலி ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கு அறிமுகமாகின்றனர்.
வங்கதேச அணி விவரம்:
மஷ்ரபி மோர்தசா(கேப்டன்), தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம்(விக்கெட் கீப்பர்), சகிப் அல் ஹசன்(துணைக் கேப்டன்), முகமது மிதுன், சபிர் ரஹ்மான், மொசாடக் ஹூசைன், முகமது சைபுதீன், மெகதி ஹசன் மிராஸ், ருபெல் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், அபு ஜயத்.