நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
Updated on
1 min read

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

வெலிங்டனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக முதல் இரு நாட்கள் ஆட்டம் முழுமையாக ரத்தான நிலையில் 3-வது நாளில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 61 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 74 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து தரப்பில் நெய்ல் வாக்னர் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 84.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 432 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

ராஸ் டெய்லர் 200, ஹென்றி நிக்கோல்ஸ் 107, கேப்டன் கேன் வில்லியம்சன் 74 ரன்கள் விளாசினர். 221 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன் னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 56 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. அதிகபட்ச மாக மஹ்மதுல்லா 67, மொகமது மிதுன் 47 ரன்கள் சேர்த்தனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் நெய்ல் வாக்னர் 5, டிரென்ட் போல்ட் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என தன்வசமாக்கியது. அந்த அணி முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in