

செயின்ட் ஜோசப் குழுமம் சார்பில் “7-வது செயின்ட் ஜோசப் டிரையம்ப் 25” டிராபிக்கான மாநில அளவிலான பள்ளிகள் இடையிலான தடகளப் போட்டி (இரு பாலருக்கும்) வரும் 6, 7 ஆகிய தேதிகளில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
92 பள்ளிகள் பங்கேற்கும் இந்த தடகளப் போட்டியில் 56 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. முதலிடத் தைப் பிடிப்பவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் ரூ.750 ரொக்கப் பரிசு, 2-வது இடத்தைப் பிடிப்பவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.500, 3-வது இடத்தைப் பிடிப்பவர்களுக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.250 வழங்கப்படும்.
சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தலா ரூ.2,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். தொடர் ஓட்டங்களில் முதல் 3 இடங் களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.1,000, ரூ.600, ரூ.400 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகும்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர், வீராங்கனை களுக்கும் தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. பதக்கம் வெல்பவர்களுக்கு பயணக் கட்டணமும் வழங்கப்படும்.