

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2019-ன் 11வது போட்டியில் சன் ரைசர்ஸ் அணி பெங்களூரு அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வருகிறது. முதல் விக்கெட்டை வீழ்த்த விராட் கோலி திணறி வருகிறார், ஆர்சிபி பவுலர்கள் திண்டாடி வருகின்றனர்.
அந்த அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சதம் எடுத்துள்ளார்.
ஜானி பேர்ஸ்டோ 52 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 101 ரன்களை எட்டினார். பிரமாதமான ஆட்டம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15.1 ஓவர்களில் 166 ரன்கள். டேவிட் வார்னர் 39 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடி ஒன்று 3 முறை தொடர்ச்சியாகச் சதக்கூட்டணி அமைத்திருப்பது இதுவே முதல் முறை, அதுவும் தொடக்கக் கூட்டணியாக இதனைச் சாதித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் அதிக ரன்கள் கூட்டணி அமைப்பது அரிதே.
விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட் செய்யாமல் இலக்கை விரட்ட முடிவெடுத்தது தவறாகப் போய் விடுமோ என்று தோன்றுகிறது,
பெங்களூரு அணியில் எல்லா பவுலர்களும் உமேஷ் யாதவ், சாஹல், மொயின் அலி, கிராண்ட் ஹோம் என்று அனைவரும் ஓவருக்கு 9 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்துள்ளனர்.
விக்கெட்டை வீழ்த்த முடியாமல் விராட் கோலியின் கேப்டன்சி பரிதாபமாகத் திணறி வருகிறது.