Last Updated : 29 Mar, 2019 07:31 PM

 

Published : 29 Mar 2019 07:31 PM
Last Updated : 29 Mar 2019 07:31 PM

சென்னை போன்ற ‘குழி பிட்ச்கள்’ டி20 கிரிக்கெட்டுக்கு உதவாது: ராபின் உத்தப்பா  திட்டவட்டம்

மந்தமான பிட்ச்கள் பரவாயில்லை ஆனால் சென்னை போன்ற குழிபிட்ச்கள், பந்துகள் கடுமையாகத் திரும்பும் பிட்ச்கள் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வராது  என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

 

12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி ஆர்சிபி, சிஎஸ்கே  இடையே நடந்தது, இந்தப் போட்டி பெரிய அளவில் போட்டிக்கு முன்னதாக ஊதிப்பெருக்கப்பட்டது.  கோலியா, தோனியா என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டது, ஆனால் போட்டி குழி பிட்ச் காரணமாக புஸ் என்று ஆகி ஆர்சிபி 70க்கு மடிய சென்னை அணி அந்த இலக்கை 18வது ஓவரில் விரட்டி படு அறுவையான ஆட்டமாக அமைந்தது.

 

இந்நிலையில் ராபின் உத்தப்பா கூறும்போது, “டி20 கிரிக்கெட் பொழுதுபோக்கு அம்சத்துக்காக உருவாக்கப்பட்டது,  பந்துகள் பயங்கரமாகத் திரும்பும் குழிப்பிட்ச்கள் டி20 கிரிக்கெட் பார்வையாளர்களை ஈர்க்காது. அது சவாலானது, ஆனால் இன்னும் பரந்துபட்ட பார்வையில் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

 

இருதரப்புக்கும் பேட்டுக்கும் பந்துக்குமான போட்டி சமமாக இருக்க வேண்டும். மந்தமான பிட்ச்கள் பரவாயில்லை, ஆனால் சென்னையில் போடப்பட்டது போன்ற குழிபிட்ச் அல்லது பயங்கரமாக பந்துகள் திரும்பும் ஆட்டக்களங்கள் டி20 கிரிக்கெட்டுக்குச் சரிபட்டு வராது. இதன் நோக்கத்தையே வீழ்த்தக் கூடியது.

 

டி20 பேட்ஸ்மென்கள் ஆட்டம், அது அப்படித்தான் இருக்கிறது. நல்ல பிட்சில் பேட்ஸ்மென்கள் சிக்ஸ் அடிக்க முயல்வதையும் அதை பவுலர்கள் அடிக்க விடாமல் செய்வதையும் பார்க்கத்தான் மக்கள் வருகிறார்கள். டி20யும் கிரிக்கெட்டுமே அந்தப் பாதையில்தான் செல்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x