

அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெற்றி கண்டார்.
அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத் தில் பிரஜ்னேஷ், ஜார்ஜியா வீரர் நிக்கோலஸ் பசிலாஷ்விலியுடன் மோதினர்.
இதில் பிரஜ்னேஷ் 6-4, 6(6)-7. 7-6(4) என்ற செட் கணக்கில் நிக்கோலஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.