Published : 27 Sep 2014 08:12 PM
Last Updated : 27 Sep 2014 08:12 PM
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ள அவர், பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பு, ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி என்றும், நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம் என்றும், நீதித்துறையின் நம்பகத்தன்மையை இமயத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற தீர்ப்பு என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.