வார்னர் சாதனையை முறியடித்தார் : ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின்  புதிய மகுடம்

வார்னர் சாதனையை முறியடித்தார் : ஐபிஎல் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின்  புதிய மகுடம்
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் 4,000 ரன்களை விரைவில் எடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிரடி வீரர்  கிறிஸ் கெய்ல் புதிய ஐபிஎல் சாதனையை இன்று எட்டினார்.

இந்தச் சாதனையை எட்டும் 2வது அயல்நாட்டு வீரரும், 9வது ஐபிஎல் வீரருமாவார் கிறிச் கெய்ல்.

ஜெய்பூரில் இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெய்ல் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

112 இன்னிங்ஸ்களில் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 4,000 ரன்களை எடுத்து அதிவேக ஐபிஎல் 4000 ரன்கள் வீரரானார். இதற்கு முன்பாக டேவிட் வார்னர் 114 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சாதனை மூலம் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, ஷிகர் தவண், தோனி ஆகியோர் அடங்கிய பட்டியலில் கெய்ல் இணைந்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுலை தவல் குல்கர்னி முதல் ஓவர் 4ம் பந்தில் வெளியேற்றினார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 10 ஓவர்கள் முடிவில் 68/2 என்று ஆடி வருகிறது. கெய்ல் 36 ரன்களுடனும் சர்பராஸ் கான் 7 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in