கொலையை விட பெரிய குற்றம் மேட்ச்-பிக்சிங்: சிஎஸ்கே ஆவணப்படத்தில் தோனி

கொலையை விட பெரிய குற்றம் மேட்ச்-பிக்சிங்: சிஎஸ்கே ஆவணப்படத்தில் தோனி
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டெழுந்து கடந்த ஐபிஎல் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது பற்றிய சிஎஸ்கேயின் ஆவணப்படம் ஒன்று தயாராகி விரைவில் வெளிவர உள்ளது.

இதில், தோனி, “ஒருவர் மிகப்பெரிய குற்றம் செய்ய முடியும் எனில் அது மேட்ச் பிக்சிங் தான், கொலை அல்ல” என்று பேசியதாக படமாக்கப்பட்டுள்ளது.  “‘Roar of the Lion” என்ற இந்த ஆவணப்படத்தின் 45 விநாடி ட்ரெய்லரில் தோனி, “அணியின் மீது புகார், என் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் காலக்கட்டம் எங்கள் அனைவருக்கும் கடினமான காலமாகும். தண்டனை மிகக்கடுமையானது என்று ரசிகர்கள் கருதினர். எனவே மீண்டும் வருவது என்பது உணர்ச்சிகரமான தருணம். நான் எப்போதுமே ஒன்று கூறுவேன், அதாவது  ‘எது உன்னைக் கொலை செய்யாதோ அது உன்னை வலிமையானதாக மாற்றும்’ என்று” இவ்வாறு அதில் கூறியுள்ளார் தோனி.

இதற்கு முன்பாக தோனி எந்த ஒரு பிரச்சினை பற்றியும் இப்படி கருத்துக் கூறியதில்லை.

ஜூலை 2015-ல் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தடை செய்யப்பட்டன. லோடா கமிட்டி பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகாலத் தடையாகும் இது.

மார்ச் 23ம் தேதி 2019 ஐபிஎல் டி20 தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே விராட் கோலி தலைமை ஆர்சிபி அணியை சென்னையில் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in