Last Updated : 24 Mar, 2019 07:54 AM

 

Published : 24 Mar 2019 07:54 AM
Last Updated : 24 Mar 2019 07:54 AM

ஐபிஎல் 12‑வது சீசன் தொடங்கியது; 70 ரன்களில் சுருண்டது பெங்களூரு: ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர் அசத்தல் பந்து வீச்சு

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 12‑வது சீசன் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணியானது ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் 17.1 ஓவரில் வெறும் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஐபிஎல் வரலாற்றில் இது  6‑வது குறைந்த பட்ச ஸ்கோராக அமைந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய பார்த்தீவ் படேல் 35 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து கடைசி வீரராக டுவைன் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக விராட் கோலி (6), மொயின் அலி (9), டி வில்லியர்ஸ் (10) ஆகியோர் ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்திருந்தனர். அதிரடி வீரரான சிம்ரன் ஹெட்மையர் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரெய்னா‑தோனி கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.  ஷிவம் துபே (2), நவ்தீப் ஷைனி (2), யுவேந்திர சாஹல் (4) ஆகியோர் இம்ரன் தகிர் பந்தில் ஆட்டமிழந்தனர். காலின் டி கிராண்ட்ஹோம் (4), உமேஷ் யாதவ் (1) ஆகியோரை  ரவீந்திர ஜடேஜா வெளியேற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் இம்ரன் தகிர் 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், ஹர்பஜன் சிங் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜடேஜா 4 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 15 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 71 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 28, சுரேஷ் ரெய்னா 19 ரன்களிலும், ஷேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஆட்டமிழந்தனர். கேதார் ஜாதவ் 13, ஜடேஜா 6 ரன்களுடன் ஆட்ட மிழக்காமல் இருந்தனர்.

7 விக் கெட்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 5 ஆண்டுகளாக பெங்க ளூரு அணியிடம் தோல்வியடை யாமல் தனது வெற்றியை தொடர்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் வரும் 26-ம் தேதி டெல்லி கேபி டல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்கிறது.

ரெய்னா 5,000 ரன்

பெங்களூரு அணிக்கு எதிராக நேற் றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரெய்னா 19 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ரெய்னா இதுவரை 5,004 ரன்கள் குவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x