Last Updated : 21 Mar, 2019 12:25 PM

 

Published : 21 Mar 2019 12:25 PM
Last Updated : 21 Mar 2019 12:25 PM

ஐபிஎல் 2019: 5 முக்கிய வீரர்களுக்கு இந்த ஐபிஎல் கடைசி சீசன்?

ஐபிஎல் அணிகளில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த 5 முக்கிய வீரர்களுக்கு இந்த சீசன் கடைசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12-வது ஐபிஎல் சீசன் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 11 சீசன்களாக ஏராளமான வீரர்கள் பல்வேறு அணிகளில் வந்துள்ளார்கள், வெளியே சென்றுள்ளார்கள். ஆனால், சில வீரர்கள் மட்டுமே நீண்டகாலமாக அணியில் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், வயது மூப்பு, களத்தில் பிரகாசிக்க முடியாமை,  இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் 5 முக்கிய வீரர்களுக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கலாம்.

யுவராஜ் சிங்

-yuvraj-singh-nets-ptijpg100 

டி20 கிரிக்கெட் போட்டிகளின் நாயகன் என்று யுவராஜ் சிங்கை குறிப்பிடலாம். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங்கின் காட்டடியை இன்னும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து யுவராஜ் சிங் விளையாடி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணி, என பல்வேறு அணிகளில் விளையாடியுள்ளார். ஆனால், கடந்த இரு சீசன்களாக யுவராஜ் சிங்கின் பேட்டிங் திறமையை கேள்விக்குள்ளாகி வருகிறது.

இந்த சீசனில் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எடுக்க யாரும் தயாராக இல்லை என்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.ஓரு கோடிக்கு விலைக்கு வாங்கியது. இந்த முறை 37 வயதாகும் யுவராஜ் சிங் தனது பேட்டிங் திறமயை நிரூபிக்காவிட்டால், இந்த சீசன் அவருக்கு கடைசியாக அமையலாம்.

ஷேன் வாட்ஸன்

ஆஸ்திரேலியாவின் 37 வயது வீரர் ஷேன் வாட்ஸன். பந்துவீச்சு, பேட்டிங் இரு துறைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த வாட்ஸன், அதன்பின் ஆர்சிபி அணியிலும், கடந்த இரு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியிலும் உள்ளார்.

கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று 15 ஆட்டங்களில் 555 ரன்கள் குவித்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வாட்ஸன். சிஎஸ்கே அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளிப்பதில் வாட்ஸன் பங்கு முக்கியம். ஆனால், இந்த சீசனில் அவருக்கு 38 வயதாகிறது என்பதால், அடுத்த ஆண்டு சீசனில் வாட்ஸன் பங்கேற்பது சந்தேகம் என ஆஸி. ஊடங்கள் தெரிவிக்கின்றன.

360 டிகிரி வீரர்

தென் ஆப்பிரிக்க முன்னாள் வீர் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் அணிகளில் விளையாடி வருகிறார். தொடக்கத்தில் 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் 2013 முதல் ஆர்சிபி அணியில் தவிர்க்க முடியாத வீரராக டிவில்லியர்ஸ் வலம் வருகிறார்.

சிறந்த விக்கெட் கீப்பர், 360 டிகிரி கோணத்திலும் மைதானத்தில் பந்துகளை விரட்டி அடிக்கும் வல்லவமை படைத்தவர் என்று டிவில்லியர்ஸ வர்ணிக்கப்பட்டாலும், வயது முக்கியமான காரணியாக இருக்கிறது. தனிவீரராக டெய்லன்டர்களுடன் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் டிவில்லியர்ஸ்.

ஆனால், ஆர்சிபி அணியில் இளமைக்கும், துடிப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால்தான் ஜெய்பூரில் நடந்த ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை  ஏலத்தில் எடுத்தனர்.

தற்போது 37 வயதாகும் டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஏலத்தில் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சமிக்ஞையை அணி நிர்வாகம் காட்டிவிட்டது. ஆதலால், சிறப்பாக விளையாடினாலும் டிவில்லியர்ஸ்க்கு இந்த சீசன் கடைசியாக இருக்கும் எனத் தெரிகிறது.

அதிரடி வீரர் கெயில்

யுனிவர்ஸல் பாஸ் என்று தன்னைதானே கூறிக்கொள்ளும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,994 ரன்கள் சேர்த்து மிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டுவரை கெயிலின் பேட்டிங் உச்ச கட்டத்தில் இருந்து, உச்ச ஃபார்மில் இருந்தார். இந்த 3ஆண்டுகளில் கெயின் பேட்டிங் சராசரி 60 ஆக உயர்ந்திருந்தது.

ஆர்சிபி அணிக்காக கெயில் விளையாடியபோதெல்லாம், தனிவீரராக களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஆட்டங்களும இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சொதப்பியதால், அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு கழற்றிவிடப்பட்டார்.

ஆனால், கெயிலை கிங்ஸ்லெவன் பஞ்சாப் விலைக்கு வாங்கியது. கடந்த சீசனிலும் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கெயிலுக்கு அடுத்த ஆண்டு  40 வயதாகிறது. ஆதலால், வயதுமூப்பை காரணமாகக் கொண்டு கிங்ஸ் லெவன் அணியும் அடுத்த சீசனில் கெயிலை கழற்றிவிடும். மேலும், கெயிலும் இந்த ஆண்டோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் தாஹிர்

தென் ஆப்பிரிக்காவின் உணர்ச்சிமிகு சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர். 37 வயதான தாஹிர் டி20 போட்டியில் நம்பர்ஒன் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இம்ரான் தாஹிருக்கும் 40 வயதாகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்துவீசி வரும் இம்ரான் தாஹிர் அடுத்த ஆண்டு ஏலத்தில் இருந்து கழற்றிவிடப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால், இந்த ஆண்டு ஏலத்தில்அதிகமான மாற்றங்களைச் செய்யாத சிஎஸ்கே அணி நிச்சயம் அடுத்த சீசன் ஏலத்தின் போது ஏராளமான மாற்றங்களைச் செய்ய காத்திருக்கிறது. ஆதலால், வயது மூப்பின் அடிப்படையில் இம்ரான் தாஹிருக்கு இது கடைசி சீசனாக அமையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x