Last Updated : 11 Mar, 2019 10:57 AM

 

Published : 11 Mar 2019 10:57 AM
Last Updated : 11 Mar 2019 10:57 AM

மகளிர் கிரிக்கெட் தரவரிசை: 3-வது இடத்தில் ஸ்மிருதி மந்தனா

ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங் கனை ஸ்மிருதி மந்தனா அதிக புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அவரது கிரிக்கெட் வாழ்வில் இதுவே அவர் பெற்றுள்ள அதிக பட்ச தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்குப் பதிலாக இங்கிலாந்து தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் ஸ்மிருதி. இங்கிலாந்துக்கு எதிரான கடந்த 3 போட்டிகளில் அவர் 72 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு அரை சதமும் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x