Published : 24 Mar 2019 08:06 AM
Last Updated : 24 Mar 2019 08:06 AM

3 கேலரிகளை திறக்க ரசிகர்கள் கோரிக்கை

சேப்பாக்கம் மைதானத்தில் காலியாக இருக்கும் 12,000 இருக்கைகள் கொண்ட 3 கேலரிகளையும் திறக்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 12ஆயிரம் இருக்கைகள் கொண்டஐ, ஜே, கே என கூடுதலாக 3 கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், அரசிடம் உரிய முறையான அனுமதி ஏதும் பெறவில்லை என்றும், விதிமுறைகளை மீறிஅவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி, 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே குத்தகைத் தொகை பிரச்சினையும் உள்ளது.

இதனால் கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

தற்போது  ஐபிஎல் போட்டி தொடங்கியுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். 2 ஆண்டு தடைக்குப் பிறகு கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் காவிரி பிரச்சினையை யொட்டி தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் காரணமாக சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள் சென்னையிலிருந்து புனேவுக்கு மாற்றப்பட்டன.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம்அடைந்தனர். தற்போது போட்டிமீண்டும் தொடங்கியுள்ளதால்ஐபிஎல் திருவிழா களை கட்டியுள்ளது. ஏராளமான ரசிகர்கள்போட்டியைப் பார்க்கவருகின்றனர். டிக்கெட்டுக்காக அலைமோதுகின்றனர். ஆனால் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெறும் போட்டிகளின் போது 3 கேலரிகளையும் திறந்தால் ஏராளமான ரசிகர்கள்போட்டியைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். இதனால்அரசுக்குக் கிடைக்கும் வருவாயும் கூடும். எனவேமூடியிருக்கும் கேலரிகளைத்திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x