Last Updated : 21 Mar, 2019 05:26 PM

 

Published : 21 Mar 2019 05:26 PM
Last Updated : 21 Mar 2019 05:26 PM

ஐபிஎல்-2019: இறுதி ஓவர்களில் கலக்கலாகப் பந்துவீசும்  5 "டெத் ஓவர்" ஸ்பெஷலிஸ்ட்கள்

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இறுதி ஓவர்கள் என்பது பந்துவீசும் அணிக்கும், பேட்டிங் அணிககும் மிக முக்கியமாது. அந்த ஓவரில் பேட்ஸ்மேனை ரன் அடிக்கவிடாமல் திணறடிக்கும், வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 5 டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

12-வது ஐபிஎல் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டித் தொடர் என்றாலே பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம்தான் என்பதை மறுப்பதற்கில்லை, பேட்ஸ்மேன்கள் சார்ந்த ஆட்டங்களாக, ரசிகர்களுக்கு விருந்தாகத்தான் இ ருக்கப் போகிறது.

ஆனால், பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைத்து வெற்றியை தங்கள் பக்கம் திருப்புவதில் பந்துவீச்சாளர்களின் பங்கு மிக முக்கியம். அதிலும் கடைசி ஓவர்களில் பந்துவீசும் பந்து வீச்சாளர்கள் மிக முக்கியம்.

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இதுபோன்று கடைசி ஓவர்களை வீசும் 5 பந்துவீச்சாளர்கள் 5 அணிகளில் இடம் பெற்றுள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு.

ஆன்ட்ரூ டை:

Andrew-Tyejpgஆன்ட்ரூ டை100 

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ டை கவனிக்கப்படக் கூடிய பந்துவீச்சாளர். கடந்த 2018-ம் ஆண்டு சீசனில் கிங்ஸ்லெவன் அணிக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளையும், தொடக்கம் மற்றும் இறுதிநேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து எதிரணியை நிலைகுலைய வைத்ததிலும் ஆனட்ரூ டையின் பங்கு முக்கியமானது. கடந்த முறை 14 போட்டிகளில் விளையாடிய ஆன்ட்ரூ டை 24 விக்கெட்டுகளை வீழ்ததினார், சராசரியாக 18.66 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

குறிப்பாக இறுதிக்கட்ட ஓவர்களை ஆன்ட்ரூ டை வீசும் போது, பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளிக்கும்விதத்தில் பந்துவீச்சு இருக்கும். யார்கர், புல்டாஸ், துல்லியம் தவறாமை, ஸ்விங் என பலவகைகளில் வீசி திக்குமுக்காடச் செய்வார். அவர் இந்த ஆண்டும் சாதிப்பார் என நம்பலாம்.

புவனேஷ்வர் குமார்

bhuvneshwar2704bcci875jpgபுவனேஷ்வர் குமார் : படம் உதவி ட்விட்டர்100 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். ஒருநாள்போட்டிக்கான இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரரான புவனேஷ்வர் குமார் பல நேரங்களில் தனது நேர்த்தியான பந்துவீச்சால் அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.

பந்துகளை இன்கட்டர், லெக் கட்டர் என மாற்றி வீசும் திறமை கொண்டவர் புவனேஷ்வர் குமார். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கடைசி நேரத்தில் யார்கர்களை வீசும் திறமை கொண்டவர். சிலநேரங்களில் பேட்ஸ்மேன்கள் புவனேஷ்குமாரின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினாலும், கடைசிஓவர்களில் சிறப்பாக வீசுவார் என்பதில் சந்தேகமில்லை. சன்ரைசர்ஸ் அணியில் அதிகமான விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியவரும் புவனேஷ்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்பிரத் பும்ரா

Bumrahjpgஜஸ்பிரித் பும்ரா : படம் உதவி ட்விட்டர்100 

சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க சிறப்பான பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித்  பும்ராவும் ஒருவர். வித்தியாசமான கை அசைவுகளுடன் பும்ரா பந்துவீசினாலும், துல்லியமான யார்கர்களை வீசுவதில் கெட்டிக்காரர். பும்ராவின் பந்துகள் தரையில் பட்டவுடன் எவ்வாறு திரும்பும் என்பது முதல்முறையாக அவரின் பந்துவீச்சை சந்திக்கும் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சிரமமான விஷயம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியத் துருப்புச்சீட்டாக பும்ரா இந்த முறை இருப்பார். இவருக்கு அணியில் பயிற்சி அளிக்க லசித் மலிங்கா இருப்பது பும்ராவின் பந்துவீச்சை மேலும் மெருகேற்றும். மல்லிங்காவை மாஸ்டர் ஆப் யார்கர் என்று அழைப்பதுண்டு. அவர்தன்னுடைய அனுபவங்களை நேரடியாக பும்ராவுக்கு கடத்துவதால், இந்த முறை டெத்பவுலர்கள் வரிசையில் பும்ராவுக்கு முதலிடத்தை அளிக்கலாம்.

சுனில் நரேன்

Narine1jpgசுனில் நரேன்: படம்உதவி ட்விட்டர்100 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் முக்கிய வீரர் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் சுனில் நரேன். கடந்த 2012, 2014-ம் ஆண்டில் கேகேஆர் அணி சாம்பியன்  பட்டம் வெல்ல நரேனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், அதிரடியான பேட்டிங்கும் முக்கியக்காரணம். சில நேரங்களில் தொடக்க ஓவர்களைக் கூட நரேன் வீசி, பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை 98 போட்டிகளில் பங்கேற்ற நரேன் 112 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார், சராசரியாக ஓவருக்கு கட்டுக்கோப்பாக 6.53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கக் கூடியவர். டி20 போட்டியில் ஓவருக்கு 7 ரன்களுக்கு குறைவாக வீசும் பந்துவீச்சாளர்களை அடையாளம் காண்பது கடினம். அந்த வகையில் நரேன் சிறந்த டெத்பவுலராக இந்த சீசனும் வலம் வருவார்.

டிரன் போல்ட்

trent-boultjpgடிரன்ட் போல்ட்100 

நியூசிலாந்தைச் சேர்ந்த டிரன் போர்ட், டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுகிறார். இடதுகை பந்துவீச்சாளரான டிரன்ட் போல்ட் அவுட் ஸ்விங் வீசி பேட்ஸ்மேன்களுக்கு படம் காட்டுவதில் வல்லவர். நியூசிலாந்து அணியில் முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக டிரன்ட்  போல்ட் தொடர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு டெல்லி அணியில் இடம் பெற்றபோல்ட் 14 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்ஸ்மேன்களின் மனதை அறிந்து சரியான இடத்தில் பந்தை துல்லியமாக வீசுவதில் டிரன்ட்போல்டுக்கு நிகர்அவர்தான். கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடி தருவதாக போல்டின்பந்துவீச்சு இருக்கும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டிரன்ட் போல்ட் மிகப்பெரிய சொத்தாக இருப்பார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x