

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் 8-வது நாளில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் தோல்வி கண்டனர்.
ஸ்பெயினின் கிரானாடாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் 50 மீ. ஏர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவின் குஹேலி கங்குலி 619.4 புள்ளிகளுடன் 26-வது இடத்தையும், லஜ்ஜா கோஸ்வாமி, ராஜ் சௌத்ரி முறையே 47 மற்றும் 48-வது இடத்தையும் பிடித்தனர். இதனால் அவர்கள் பதக்கமின்றி ஏமாற்றத்தோடு திரும்பினர்.
ஆடவர் ஜூனியர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சத்யம் சௌகான், இகம்பீர் சிங், பிரசாந்த் ஆகியோர் முறையே 618.2, 616.8, 616.2 புள்ளிகளுடன் முறையே 22, 29, 32-வது இடங்களைப் பிடித்தனர்.
மகளிர் ஜூனியர் 50 மீ. ரைபிள் புரோன் பிரிவில் இந்திய அணி 9-வது இடத்தைப் பிடித்தது. இந்திய வீராங்கனைகள் எலிசபெத் சூசன் கோஷி, பிரியாள் கேனி, அஞ்சும் முத்கில் ஆகியோர் முறையே 28, 34, 43-வது இடங்களைப் பிடித்தனர்.