

இந்தியன் வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வந்தார். தகுதி நிலை வீரராக இந்தத் தொடரில் இடம் பெற்றிருந்த அவர், தனது 3-வது சுற்றில் 89-ம் நிலை வீரரான குரோஷியாவின் இவோ கார்லோ விச்சை எதிர்த்து விளையாடினார்.
இதில் குணேஸ்வரன் 3-6, 6-7(4) என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். இரட்டை யர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியா வின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபலோவ் ஜோடி 6-4, 1-6, 8-10 என்ற செட் கணக்கில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் பேபியா போக்னி ஜோடியிடம் வீழ்ந்தது.