Published : 27 Mar 2019 08:13 am

Updated : 27 Mar 2019 08:13 am

 

Published : 27 Mar 2019 08:13 AM
Last Updated : 27 Mar 2019 08:13 AM

கொல்கத்தாவுடன் பஞ்சாப் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனானஆட்டத்தின் போது ஜாஸ் பட்லரை,மன்கட் முறையில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிரிக்கெட் உலகில் இது விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.


ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில், 79 ரன்கள் விளாசினார். இதேபோல் சர்ப்ராஸ் கானும் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மன்தீப் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் மொகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அங்கித் ராஜ்புத் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

கொல்கத்தா அணியும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. கடந்த ஆட்டத்தில் கிறில் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கத் தவறினர். அதேவேளையில் நித்திஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், சுப்மான் கில் ஆகியோர் தங்களது அதிரடியால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

நேரம்: இரவு 8 மணி

இடம்: கொல்கத்தா

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x