Published : 02 Mar 2019 09:25 AM
Last Updated : 02 Mar 2019 09:25 AM

சென்னை சிட்டி அணி அதிர்ச்சி தோல்வி

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொட ரில் சர்ச்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

கோவாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 29-வது நிமிடத் தில் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து சான்ட்ரோ ரோட்ரிக்ஸ் அடித்த பந்து கோல் வலையை துளைக்க சென்னை சிட்டி அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 9-வது நிமிடத்தில் சர்ச்சில் பிரதர்ஸ் அணி பதிலடி கொடுத்தது.

நிக்கோலஸ் பெர்னாண்டஸ் உதவியுடன் இந்த கோலை வில்ஸ் பிளாசா அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. 49-வது நிமிடத்தில் வெயின் வாஸிடம் இருந்து பந்தை பெற்ற கிறிஸ் ரெமி துல்லியமாக இலக்கை நோக்கி உதைக்க கோலாக மாறியது. இதனால் சர்ச்சில் பிரதர்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

69-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பெட்ரோ ஜாவியர் மான்ஸி கோலாக மாற்ற ஆட்டம் 2-2 என்ற சமநிலையை அடைந்தது. ஆனால் அடுத்த நிமிடத்தில் காலித் அச்சோ உதவியுடன் பந்தை பெற்ற வில்ஸ் பிளாசா கோல்கம்பத்தின் வலது பக்கம் நோக்கி பந்தை செலுத்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி 3-2 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது.

இதன் பின்னர் இரு அணிகளும் கடைசி வரை போராடிய போதிலும் மேற்கொண்டு கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் சர்ச் சில் பிரதர்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 9-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் சென்னை சிட்டி அணி 3-வது தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் சென்னை சிட்டி அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னை சிட்டி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மினர்வா பஞ்சாப் அணியை தனது சொந்த மைதானமான கோவையில் வரும் 9-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் சென்னை சிட்டி அணியின் வசமாகும். தற் போது சென்னை அணி 40 புள்ளி களுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

சாம்பியன் பட்டம் வெல்லும் ரேசில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியும் உள்ளது. அந்த அணி 18 ஆட்டங்களில் 36 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்னும் இரு ஆட் டங்கள் அந்த அணிக்கு எஞ்சியுள் ளது. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அந்த அணி 42 புள்ளிகளை எட்டும். ஒரு வேளை ஈஸ்ட் பெங்கால் அணி ஒரு ஆட்டத் தில் தோல்வியடைந்தாலும் சென்னை சிட்டி அணி சாம்பியன் பட்டம் வெல்லக்கூடும். ஈஸ்ட் பெங்கால் அணி தனது அடுத்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப்பு அணியுடன் நாளையும், கடைசி லீக் ஆட்டத்தில் 9-ம் தேதி கோகுலம் கேரளா அணியுடனும் மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x