Last Updated : 06 Mar, 2019 12:40 PM

 

Published : 06 Mar 2019 12:40 PM
Last Updated : 06 Mar 2019 12:40 PM

‘சான்ஸ்லெஸ்’- வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே விராட் கோலி: புகழ்ந்து தள்ளும் பாட் கமின்ஸ்

நாக்பூர் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் 40வது ஒருநாள் சதம் (116) இரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசத்தை எடுத்துரைப்பதாக  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

 

ஒரு முனையில் விராட் கோலியை மட்டும் ஆஸ்திரேலியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனை மிகச் சரியாக கேப்டன் பிஞ்ச்சும் கவனித்துக் கூறினார் பிறகு பவுலர் பாட் கமின்ஸும் இதனை வழிமொழிந்தார்.

 

இது குறித்து பாட் கமின்ஸ் கூறியதாவது:

 

கோலிதான் இரு அணிகளுக்கு இடையேயான பெரிய வித்தியாசம். நாங்களும் இரண்டு பேட்டிங் நல்ல கூட்டணிகளை அமைத்தோம், மார்கஸ் ஸ்டாய்னிஸ் அரைசதம் அடித்தார். ஓரிரு வீரர்கள் நன்றாகத் தொடங்கினர், ஆனால் எங்களிடம் அந்த ‘ஒரு வீரர்’ இல்லை. அதுதான் வித்தியாசம்.

 

 ஆகவே, இந்திய அணிக்கு விராட் கோலி என்ற அந்த ஒரு நபர் இருக்கிறார், நிறைய பந்துகளை சந்திக்கிறார், 200 ரன்களுக்கும் 250 ரன்களுக்கும் உள்ள வித்தியாசம் விராட் கோலிதான்.

 

நல்ல ஷாட்களை ஆடினார், பெரும்பாலும் அவருக்கு நன்றாகத்தான் வீசினோம், ஆனால் இந்தப் பிட்சில் கடினமான ஸ்பின் பந்து வீச்சை விராட் எதிர்கொண்ட விதம் அபாரம். இதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

 

அவர் தன் பேட்டிங்கில் முழு ஆதிக்கக் காலக்கட்டத்தில் இருக்கிறார்.  மிக அழகாக ஆடினார், எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை, சான்ஸ்லெஸ் இன்னிங்ஸ், பந்துகளை எதிர்கொள்ள அவருக்கு மட்டும் அதிக கால அவகாசம் கிட்டியது.

 

எந்த பவுலராவது நன்றாக வீசினால் அவர் காத்திருக்கிறார், பிறகு ரன்களை எடுக்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்.  மோசமான பந்துகளை அவர் அடிக்காமல் விடுவதில்லை.

 

ஆனால் இந்திய அணியை ஆல் அவுட் செய்தது சிறப்பானது. ஆடம் ஸாம்பா 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார், இது ஒரு பெரிய அறிகுறி, நேதன் லயனும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நேராக இங்கு வந்து வீசுவது கடினம், ஆனால் அவரும் டைட்டாக வைத்திருந்தர். இது ஒரு பாசிட்டிவ் அம்சமாகப் பார்க்கிறேன்.

 

இவ்வாறு கூறினார் பாட் கமின்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x