Published : 16 Mar 2019 10:03 AM
Last Updated : 16 Mar 2019 10:03 AM

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் சென்னை சேப்பாக்கத்தில் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.  நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பட்டம் வெல்வதற்காக கலந்து கொண்டு மோத உள்ளன.   இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி குறித்த ஓர் அலசல்.

மொத்த வீரர்கள்: 24

இந்திய வீரர்கள் : 16

வெளிநாட்டு வீரர்கள்: 8

அணிச்சேர்க்கை

தொடக்க வீரர்: தேவ்தத் படிக்கல்

நடுவரிசை வீரர்கள்: விராட் கோலி, டி வில்லியர்ஸ், மிலிந்த் குமார், ஹிமாத் சிங், சிம்ரன் ஹெட்மையர்.

விக்கெட் கீப்பர்கள்: பார்த்தீவ் படேல், ஹென்ரிச் கிளாசன்

ஆல்ரவுண்டர்கள்: மொயின் அலி, காலின் டி கிராண்ட் ஹோம், மார்கஸ் ஸ்டாயினிஸ், பிரயாஷ் ரே பர்மான், அக் ஷ்தீப் நாத், குர்கீரத் சிங், ஷிவம் துபே.

ரிஸ்ட் ஸ்பின்னர்: யுவேந்திர சாஹல்

விரல் ஸ்பின்னர்: வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி

வேகப்பந்து வீச்சாளர்கள்: குல்வந்த் கேஜ்ரோலியா, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நேதன் கோல்டர் நைல், மொகமது சிராஜ், டிம் சவுதி.

பலம்

உலகின் சிறந்த  டி 20 பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டி வில்லியர்ஸ், தொடர்ச்சியாக ரன் வேட்டையாடும் விராட் கோலி ஆகியோர் அணியின் அசுர பலமாக உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இணைந்து விளையாடி வரும் இவர்கள் இம்முறையும் ரன் வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளனர். இவர்களுடன் சிம்ரன் ஹெட்மையரும் இணைவது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும்.

பவர்பிளே பந்துவீச்சு

உமேஷ் யாதவ், டிம் சவுதி, நேதன் கவுல்டர் நைல் ஆகியோர் பவர் பிளேவில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். கடந்த சீசனில் உமேஷ் யாதவ் பவர் பிளேவில் விக்கெட்களை வீழ்த்தி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

பலவீனம்

# விராட் கோலியை தவிர்த்து அணியில் உள்ள மற்ற இந்திய வீரர்களிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு இல்லாதது பெரிய பலவீனமாக உள்ளது. கடந்த சீசனில் விராட் கோலியை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களின் பேட்டிங் சராசரி வெறும் 17.11 ஆகவே இருந்தது.

# வெளிநாட்டு வீரர்களில் 4 பேர் மட்டுமே விளையாடும் லெவனில் இடம் பெற முடியும் என்ற சூழ்நிலையில் டி வில்லியர்ஸ், சிம்ரன் ஹெட் மையர் ஆகியோருடன் ஒரு பந்து வீச்சாளரும் அணியில் நிரந்தரமாக இடம் பெறுகின்றனர். இதனால் வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் அதிக அளவில் இடம் பெற முடிவதில்லை.

# கடந்த சீசனில் இறுதிக்கட்ட பந்து வீச்சு மோசமாக உள்ளது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் சராசரியாக ஓவருக்கு சுமார் 12 ரன்கள் வரை வாரி வழங்கியிருந்தனர்.

# சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல் மட்டுமே பலம் சேர்க்கிறார். இவருக்கு வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, மொயின் அலி ஆகியோர் உறுதுணையாக செயல்படுவது அவசியம். இவர்கள் 3 பேரும் டி 20 வடிவில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்தான். ஆனால் தொடர்ச்சியாக சிறந்த செயல்பாடு இருப்பது இல்லை.

இதுவரை

2008 - 7-வது இடம்

2009 - 2-வது இடம்

2010 - 4-வது இடம்

2011 - 2-வது இடம்

2012 - 5-வது இடம்

2013 - 5-வது இடம்

2014 - 7-வது இடம்

2015 - 3-வது இடம்

2016 - 2-வது இடம்

2017 - 8-வது இடம்

2018 - 6-வது இடம்

விராட் கோலி

விராட் கோலி பேட்ஸ்மேனாக எந்தவித திறனையும் நிரூபிக்க வேண்டியதில்லைதான். ஆனால் ஒரு கேப்டனாக அவர், அணியை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வது அவசியம்.

ரன்கள்: 4,948, 

சராசரி: 38.35 

உமேஷ் யாதவ்

இந்திய அணிக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக உள்ள வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் இம்முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பலம் சேர்ப்பவராக இருக்கக்கூடும்.

விக்கெட்கள்: 111    

ஸ்டிரைக் ரேட்: 20.29

யுவேந்திர சாஹல்

இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக தனது திறனை பட்டைத்தீட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.

விக்கெட்கள்:  82    

ஸ்டிரைக் ரேட்: 18.18 

ஹெட்மையர்

மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த அதிரடி வீரரான சிம்ரன் ஹெட்மையர் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். எந்தவித சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் மட்டையை சுழற்றுவது இவரது பலம்.

டி வில்லியர்ஸ்

மைதானத்தின் எந்த திசைக்கும் 360 டிகிரி கோணத்தில் வளைந்து பந்தை விளாசும் ஏபி டி வில்லியர்ஸ், எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்.

ரன்கள்: 3,953

சராசரி: 39.53

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x