Published : 15 Mar 2019 05:14 PM
Last Updated : 15 Mar 2019 05:14 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதங்கள்: டாப் 10-ல் 3 இடங்களில் கிறிஸ் கெய்ல்

2008 முதல் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய டி20 தனியார் லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் 2019-ம் ஆண்டில் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனியின் சிஎஸ்கேயும் கோலியின் ஆர்சிபியும் மோதுகின்றனர்.

 

ஏற்கெனவே இந்தப் போட்டியை ‘தல’ ரசிகர்களும், ‘கிங்’ ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்குவதோடு யார் வெற்றி பெறுவார்கள் என்பது வரை விவாதங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதங்களை எடுத்தவர்கள் பட்டியலில் ‘உலகின் பாஸ்’ கிறிஸ் கெய்ல்தான் உள்ளார் அவர் 30 பந்துகளில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இந்த அதிவேக ஐபிஎல் சதத்தை அடித்தார் கிறிஸ் கெய்ல். இந்த இன்னிங்சில் 175 ரன்களை விளாசிய கெய்ல் அதில் 17 சிக்சர்கள் 13 பவுண்ட்ரிகளை அடித்தார்.

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 52 முறை சதம் அடிக்கப்பட்டுள்ளது.

 

இதில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் இருக்க, அடுத்தடுத்த இடங்களில் உள்ள வீரர்களில் டாப் 10 இதோ:

 

2. யூசுப் பத்தான் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010-ல் 37 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார்.

 

3. டேவிட் மில்லர் ஆர்சிபி அணிக்கு எதிராக 2013-ல் 38 பந்துகளில்  7 சிக்சர்கள் 8 பவுண்டரிகளுடன் சதமெடுத்தார், இந்த இன்னிங்சில் இவர் எடுத்த ஸ்கோர் 101.

 

4. ஆடம் கில்கிறிஸ்ட் 2008-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 42 பந்துகளில் 10 சிக்சர்கள் 9 பவுண்டரிகளுடன் சதம் எடுத்து அந்த இன்னிங்சில் 109 ரன்களை எடுத்தார்.

 

5. ஏ.பி.டிவில்லியர்ஸ்,  2016-ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 43 பந்துகளில் 10  பவுண்டரிகள் 12சிக்சர்களுடன் சதம் எடுத்து அந்த இன்னிங்சில் 129 ரன்கள் விளாசினார்.

 

6.டேவிட் வார்னர், 2017- ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 43 பந்துகளில் 8 சிக்சர்கள் 10 பவுண்டரிகளுடன் சதம் கண்டார்.

 

7. சனத் ஜெயசூரியா, 2008-ல் மும்பை இந்தியன்ஸுக்காக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக 45 பந்துகளில் 11 சிக்ஸ், 9 பவுண்டரிகளுடன் சதமெடுத்தார்.

 

8. முரளி விஜய், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 2010-ல் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 10 பவுண்டரிகளுடன் சதம் எடுத்தார்.

 

9.கிறிஸ் கெய்ல்,  கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக 2015-ல் 12 சிக்ஸ் 7 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் சதம் அடித்தார்.

 

10. கிறிஸ் கெய்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக   2011-ல் 46 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்.

 

விராட் கோலி 13வது இடத்தில் இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x