Last Updated : 28 Mar, 2019 03:08 PM

 

Published : 28 Mar 2019 03:08 PM
Last Updated : 28 Mar 2019 03:08 PM

மன்கட் அவுட் விவகாரத்தில் அஸ்வினை கைவிட்டு பல்டி அடித்த எம்சிசி

மன்கட் அவுட் விவகாரத்தில் அஸ்வின் செய்தது சரி என்று கருத்துதெரிவித்த லண்டனைச் சேர்ந்த பாரம்பரிய  எம்சிசி(மெர்லிபோன் கிரிக்கெட் கிளப்) கிளப் 24 மணிநேரத்துக்குள் பல்டி அடித்து, அஸ்வின் செய்தது ஸ்பிரிட் ஆப் தி கேமுக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் ஜெயப்பூரில் நேற்று முன்தினம் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார் அஸ்வின். அஸ்வினின் இந்த செயல்பாடு சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அஸ்வின் விதிப்படி நடந்தார் என்றும் , விதி இருந்தாலும் பேட்ஸ்மேனிடம் எச்சரிக்கை செய்யாமல் அவுட் செய்தது ஸ்பிரிட் ஆப்தி கேமை குலைக்கும் என்று இருவேறு கருத்துக்கள் நிலவின.

ஆனால், தான் கிரிக்கெட்டில் உள்ள விதிப்படிதான் நடந்து கொண்டேன், அதில் தவறில்லை, கிரிக்கெட் ஸ்பிரிட் குறித்து விதியில் கூறப்படவில்லை. ஆட்டமிழக்கச் செய்யும்முன் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை  வேண்டிய அவசியமில்லை என்று அஸ்வின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அஸ்வினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சர்வதேச அளவில் கருத்துக்கள் வரத் தொடங்கின. இந்நிலையில், லண்டனில் உள்ள பாரம்பரிய புகழ்பெற்ற கிரிக்கெட் கிளப்பான எம்சிசி, அஸ்வினின் செயலை ஆதரித்து இருந்தது. எம்சிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் " பந்துவீச்சாளர் பந்துவீசும் வரை நான்-ஸ்ட்ரைக்கர் கிரீஸ்குள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நான்-ஸ்ட்ரைக்கர் இருந்தால், எச்சரிக்கை செய்யாமல் பந்துவீச்சாளர் அவுட் செய்வதில் தவறில்லை.ஆதலால் அஸ்வின் செய்தது சரிதான்" எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கை வெளியிட்ட 24 மணிநேரத்துக்குள் எம்சிசி அந்தர் பல்டி அடித்து, அஸ்வின் செய்தது தவறுதான், விதிப்படி எப்படி விளையாடினாலும், ஸ்பிரிட் ஆப் தி கேம் குலையாமல் இருக்க வேண்டும். ஆனால், அஸ்வின் செயலில் ஸ்பிரிட் ஆப் தி கேம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

எம்சிசி சட்டவிதிகளின் மேலாளர் பிரேஸர் ஸ்டீவார்ட் லண்டனில் வெளியாகும் ஒரு நாளேடுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " அஸ்வின் மன்கட் அவுட் செய்த சம்பவத்தை மீண்டும், மீண்டும் நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்தோம். அந்த ஆய்வின் முடிவில் அஸ்வின் செயல்பாடு, ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டுக்குள் இல்லை.

அஸ்வின் பந்துவீச வருவதற்கும், எடுத்துக்கொண்ட நேரத்துக்கும் , அஸ்வின் பந்துவீச்சு செயலுக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருக்கிறது. பந்துஅஸ்வினின் கையில் இருந்து வெளியே சென்றுவிட்டது என்ற நினைப்போடுதான் பட்லர் கிரீஸில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதற்கு முன்புவரை கிரீஸுக்குள்தான் பட்லர் இருந்துள்ளார். ஆதலால் அஸ்வின் செய்த செயல் நியாயமற்றது. இது ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டுக்கு எதிரானதுதான்.

அதேசமயம், நான்-ஸ்ட்ரைக்கர்ஸ் பந்துவீச்சாளரிடம் இருந்து பந்து வெளியேறிச் செல்லும் வரை கிரீஸுக்குள்தான் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x