

அலிஸ்டர் குக் இங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பை உதற மறுத்தால் அவரை நீக்குவதுதான் ஒரே வழி என்று முன்னாள் ஈகேப்டன் மைக்கேல் வான் காட்டமாகக் கூறியுள்ளார்.
"ஒருநாள் கிரிக்கெட் வித்தியாசமானது. அலிஸ்டர் குக் கேப்டன் பதவியிலிருந்து இறங்க மறுத்தால் அவரை நீக்குவதுதான் சிறந்தது. அவர் ராஜினாமா செய்யவில்லை, ஜேம்ஸ் விடேகர், பால் டவுண்டன் போன்ற வாரிய நிர்வாகிகளும் மாற்றம் வேண்டும் என்பதை உணரவில்லையெனில் இங்கிலாந்து கிரிக்கெட்டின் எதிர்கால நன்மை குறித்த இவர்களது நோக்கத்தை நான் சீரியசாகக் கேள்வி கேட்க நேரிடும்.
டெஸ்ட் தொடரை வென்று அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அதனை மறுக்கவில்லை.
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் என்பது வேறு விஷயம், உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில் குக் கேப்டனாக நீடிப்பதும், அவரே தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்று கூறுவதும் சரியாகப் படவில்லை.
இவர் நீடித்தால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அச்சுறுத்தும் அணியாக ஒருபோதும் இருக்காது” என்று சாடினார் வான்.