

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் இடது தோளில் காயமடைந்தார். நியூஸிலாந்து, வங்கதேச அணி களுக்கு இடையிலான 2-வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட் டத்தின்போது கேன் வில்லியம் ஸனுக்கு தோளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து களத்திலேயே டாக்டர் கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
74 ரன்களில் அவர் ஆட்டமிழந்த நிலையில் அவருக்கு இடது தோளில் வலி அதிகமானது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது என்று அணியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள் ளார்.