Published : 09 Mar 2019 02:56 PM
Last Updated : 09 Mar 2019 02:56 PM

சச்சின், லாராவை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனா? - ஷேன் வார்ன் தடுமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடர்ந்து பிரமாதமாக ஆடி வரும் விராட் கோலி நடப்பு ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 2 சதங்களை எடுத்தார். இது குறித்து ஷேன் வார்ன் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

 

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி பற்றி குறிப்பிட்டபோது, “விராட் கோலி பேட்டிங் மற்றும் அவரது கிரிக்கெட்டைப் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு போதும் அவர் விட்டுவிடுவதில்லை, அணி வெற்றி பெற முடியும் என்ற அயராத நம்பிக்கை, அணுகுமுறை என் இதயத்தை வருடுகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

 

இதனையடுத்து அவரிடம் யாரோ விராட் கோலி, என்ன சச்சின் டெண்டுல்கர், லாரா ஆகியோரை விட சிறந்த பேட்ஸ்மேனா என்று கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அதனைக் குறிப்பிட்ட இன்னொரு ட்வீட்டில் ஷேன் வார்ன் பதிவிட்டிருப்பதாவது:

 

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாராவை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மன் என்று நான் கருதுகிறேனா என்று என்னிடம் கேட்கப்பட்டது.  அதைப்பற்றி நான் சிந்தித்து பிறகு உங்களிடம் வருகிறேன் என்று பதிலளித்தேன்.  டான் பிராட்மேனுக்குப் பிறகு என்னைப் பொறுத்த அளவில் விவ் ரிச்சர்ட்ஸ்தான் சிறந்த பேட்ஸ்மன்.

 

ஆனால் நவீன கிரிக்கெட் காலத்தில் ம்ம்ம்ம்... கடினம்தான்... என்று பதிவிட்டுள்ளார்.

 

பிறகு இன்னொரு ட்வீட்டில், நான் பார்த்ததில் சிறந்த பேட்ஸ்மன் யார், விராட் கோலி அதில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நான் யோசித்துவரும்போதே சிறந்த 3 வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்றால்,

 

1. டெனிஸ் லில்லி

 

2. வாசிம் அக்ரம்.

 

3. மால்கம் மார்ஷல்.

 

ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x