Published : 28 Mar 2019 11:28 AM
Last Updated : 28 Mar 2019 11:28 AM

‘‘இதுவும் பவுலர்களின் தவறுதான்”: அஷ்வினுக்கு ஆதரவாக மிட்செல் ஜான்சன்

12-வது ஐபிஎல் போட்டியியில் ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  ’மன்கட்’  முறையில் பட்லரின் விக்கெட்டை விழ்த்தியதற்கு கடும் விமர்சனத்துக்கு உள்ளான அஸ்வினுக்கு மிட்செல் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில்  திங்கட்கிழமை நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில் அஸ்வின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், பந்துவீசுவதை பாதியில் நிறுத்தி ரன்அவுட் செய்தார் அஸ்வின்.

இந்த மன்கட் அவுட் முறை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியது. இந்த சர்ச்சை குறித்தும், அஸ்வின் செய்தது கிரிக்கெட் விதிப்படி சரியென்றாலும், ஸ்பிரிட்ஆப்தி கேம் கூற்றின்படி பேட்ஸ்மேனுக்கு ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் இங்கிலாந்து வீரர்களால் அஸ்வின் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் அஸ்வினுக்கு ஆதரவாக கபில்தேவ், மஞ்ரேக்கர், டிராவிட் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய  அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்  மிட்செல் ஜான்சன் அஸ்வினுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில்  நேற்று நடந்த கொகத்தா, பஞ்சாப்  அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின்போது கொல்கத்தா வீரர் ரஸல் பந்து வீசும்போது பஞ்சாப் பேஸ்ட்மேன் முன்னதாகவே கீரிஸை தாண்டி நிற்பார்.

இந்த புகைப்படத்தை பதிவிட்டு ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவும் பந்துவீச்சாளர்களின் தவறுதான். பந்து வீசுவதற்கு முன்னர் பவுலர்களின் முன்னங்கால் எல்லைக்கோட்டின் உள் சரியாக இருக்கிறதா என்று சரி பாருங்கள்”  என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக மன்கட் முறையில் விக்கெட் குறித்து ஜான்சன்,”

”மன்கட் முறையில் விக்கெட் எடுப்பது ஏமாற்றுவது அல்ல. இது விதியில் இருக்கிறது. இருப்பினும் நான் ஒருமுறை அந்த பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை கொடுத்திருப்பேன். பேட்ஸ்மேன்களும்  விதிகளை உணர்ந்து நியாயமாக விளையாட வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x