

நேற்று ஹராரேயில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.
அதாவது டேல் ஸ்டெய்ன் பந்து வீச்சில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசினார் மிட்செல் மார்ஷ்.
ஆட்டத்தின் 47வது ஓவரை டேல் ஸ்டெய்ன் வீச வந்தார். முதல் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே லெந்த் பந்து நேராக தூக்கி அடித்தார் முதல் சிக்சர்.
சற்றே கடுப்பான ஸ்டெய்ன் அடுத்த பந்தை ஷாட் பிட்சாக வீச அதனை வெறி கொண்டு புல் ஆடி லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார். இது நம்பர் 2.
அடுத்த பந்தை கொஞ்சம் வைடாக வீசினார் ஸ்டெய்ன் ஆனாலும் விடாத மார்ஷ் லாங் ஆஃப் திசையில் தூக்கி சிக்சர் அடித்தார். தொடர்ச்சியான 3வது சிக்சர் ஆகும் இது.
டேல் ஸ்டெய்ன் பந்து வீச்சில் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மெனும் 3 சிக்சர்களை அடித்ததில்லை. ஒரு நாள் போட்டிகளில் 5 முறை ஸ்டெய்ன் ஓவரில் 2 சிச்கர்கள் அடிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் 2 முறை அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 3 சிக்சர்கள் இதுவே முதல் முறை.
அந்த ஓவரில் அரைசதம் கண்ட மார்ஷ் 21 ரன்களை ஸ்டெய்ன் ஓவரில் விளாசினார். இந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.