

தனக்கு என்றும் பிடித்த பந்து வீச்சாளர் என பாகிஸ்தான் பந்து வீச்சாளர் அக்தர் பேரை குறிப்பிட்டு இருக்கிறார் தவான்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதனையடுத்து இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையில், இந்திய அணி வீரர்கள் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இதில் டெல்லி அணியில் இடப்பெற்றுள்ள இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண். டெல்லி கேப்பிடல் அணி சார்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டார்.
அதில் தவணிடம் அவருக்கு பிடித்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, “ தனக்கு எப்போதும் பிடித்த பந்து வீச்சாளர் ஷோயப்அக்தர்” என்று ஷிக்கர் தவண் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் காரணமாக, இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களும், பாகிஸ்தான் வீர்ரகளும் ஒருவரையொருவர் நட்புப் பாராட்டி வருவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.