

உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்படக் கூடாது என்று கூறும் ஷேன் வார்ன் டார்சி ஷார்ட்டுக்கு முன்னுரிமை கொடுத்து தன் உலகக்கோப்பை ஆஸ்திரேலிய லெவன் அணியை அறிவித்துள்ளார்.
டார்சி ஷார்ட் சமீபத்தில் முடிந்த பிக்பாஷ் டி20 தொடரில் தொடர்நாயகன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டேவிட் வார்னர், ஸ்மித் இவரது உலகக்கோப்பை அணிக்குத் திரும்பியுள்ளனர். அதேபோல் பவுலிங்கில் கமின்ஸ், ஸ்டார்க் உள்ளனர் ஆனால் ஹேசில்வுட் இந்த அணியில் இடம்பெறவில்லை. ஹேசில்வுட்டுக்குப் பதிலாக டாஸ்மேனியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரிடித் என்பவரைச் சேர்த்துள்ளார்.
மெரிடித் சீராக மணிக்கு 145 கிமீ வேகத்தில் வீசி வருவதாகவும், சில வேளைகளில் மணிக்கு 150 கிமீ வேகமும் தொடுகிறார். என்கிறார் ஷேன் வார்ன்.
பேட்டிங்கில் ஷான் மார்ஷ் முழு உடல்தகுதி பெற்றவுடன் தன் அணியில் சேர்க்கப்படுவார் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னின் ஆஸி. உலகக்கோப்பை அணி வருமாறு:
வார்னர், டார்சி ஷார்ட், ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்மித், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (வி.கீ), கமின்ஸ், ஸ்டார்க், மெரிடித், ஆடம் ஸாம்ப்பா.