Published : 11 Mar 2019 04:02 PM
Last Updated : 11 Mar 2019 04:02 PM

விராட் கோலியை ‘ஜோக்’ என்று குறிப்பிட்ட இங்கிலாந்து வீரர்: நெட்டிசன்கள் விளாசல்

இந்தியாவின், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலியை ‘ஜோக்’ என்று குறிப்பிட்ட இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் வசமாக நெட்டிசன்கள் வசையில் சிக்கினார்.

 

பென் டக்கெட் யார் என்றால் இங்கிலாந்துக்காக 2016-ல் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மனான இவரின் கடைசி போட்டியும் அதே ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆடப்பட்டது. இப்போது உள்நாட்டு கிரிக்கெட் ஆடி வருகிறார்.

 

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கிரிக்கெட் ஷவுட்ஸ் என்ற தனது ட்விட்டர் கணக்கில், ‘விராட் கோலி இஸ்-----’ என்று குறிப்பிட்டு வெற்றிடத்தை பூர்த்தி செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

 

இந்த வாக்கியத்தைப் பூர்த்தி செய்யும்போது பென் டக்கெட் ‘எ ஜோக்’ என்று பதிவிட்டார், அதாவது  ‘விராட் கோலி இஸ் எ ஜோக்’ என்று பொருளானது.

 

விராட் கோலியை இப்படிச் சொன்னால் சும்மா விடுவார்களா இந்திய நெட்டிசன்கள்... வசமாகச் சிக்கினார் பென் டக்கெட்.

 

இவருக்கு எதிரான சில ட்விட்டர் வாசகங்கள் சில:

 

விராட் கோலி  அடித்த சர்வதேச ரன்களில் பாதியையாவது உன்னால் எடுக்க முடியுமா? விராட் கோலி ஒரு ஜோக் என்றால் இங்கிலாந்து வீரர்களை என்ன சொல்வது?

 

உங்களைப்பற்றி கேட்கவில்லை பென் டக்கெட்..

 

தன் பெயரில் ‘டக்’ உள்ளவர் 66 சர்வதேச சதங்களை எடுத்தவர் பற்றி பேசலாமா?

 

ஹேய் பென், உன் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி கேட்கவில்லை..

 

நீங்கள் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு இதைச் சொல்லியிருக்கிறீர்கள்.. சரியா?

 

மருத்துவரைப் பாருங்கள்... நீங்கள் விரைவில் மனநலம் பெற பிரார்த்திக்கிறோம்

 

என்று பலரும் விட்டு வாங்கு வாங்கென்று வாங்க ஒரு சிலரோ, ‘இந்த அளவுக்கு ஒருவரால் உயர முடியும் என்றால் அது விராட் கோலிதான் இது ஜோக்தான் உண்மையாக இருக்க முடியாது  என்று புகழ்ந்துள்ளார், பென் டக்கெட்டை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்’ என்று ஆதரவாகவும் ட்வீட் செய்துள்ளனர்.

 

அவர் நல்ல முறையில்தான் கூறியுள்ளார், இந்தியர்கள் எப்போதும் போல் உணர்ச்சிவயப்படுபவர்கள் என்று இங்கிலாந்து நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x