Published : 08 Mar 2019 03:26 PM
Last Updated : 08 Mar 2019 03:26 PM

‘சொந்த மண்ணில் தோனி ஆடும் கடைசி போட்டி...:’ புவனேஷ்குமாரிடம் கூறிய ஆர்வமிகுதி பத்திரிகையாளர்

ஜார்கண்டில் தன் சொந்த மண்ணில் தன் பெயரில் ஸ்டாண்ட் ஒன்று திறக்கப்பட்ட சூழலில் தோனி ஆஸ்திரேலியா-இந்தியா 3வது ஒருநாள் போட்டியில் ஆடி வருகிறார். தோனி பெயரில் ஸ்டாண்ட் என்பதால் ஜார்கண்ட் மைதானம் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

 

பத்திரிகையாளர்கள் கூட்டமும் அதிகமிருந்தது. நிறைய பத்திரிகைகள் தோனியை வைத்து தலைப்புச் செய்திகளை வெளியிடும் ஆர்வமிகுந்தவை, அப்படிப்பட்ட  ஊடகம் ஒன்றின் நிருபர் திடீரென புவனேஷ்வர் குமாரிடம் , தன் சொந்த மண்ணில் இதுதான் தோனி ஆடும் கடைசி சர்வதேச போட்டி என்றார் இதற்கு தன் முகத்தில் லேசான சிரிப்புடனும் இளிவரலுடனும் புவனேஷ்வர் குமார், “உங்களுக்கு எப்படி அது தெரியும்?” என்று கேட்டார்.

 

தோனி பற்றிய இதே கேள்வியை முன்னாள் பிஹார் அண்ட் செண்ட்ரல் கோல் லிமிடெட் அணி கேப்டனும் தோனியுடன் கிளப் மட்ட கிரிக்கெட்டில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடியவருமான ஆதில் ஹுசைன் என்பவரிடம் கேட்ட போது,  “தோனி இப்போதும் உடல்தகுதியுடன் இருக்கிறார், மேலும் ஆடிக்கொண்டுதான் இருப்பார், இந்திய அணியில் இளம் வீரர்களை விடவும் தோனி வேகமாக ஓடுகிறார். அவர் ராஞ்சிக்கு மீண்டும் வருவார், ஆடுவார். ஆனால் அதே வேளையில் அவர் திடீரென முடிவெடுத்து ஆச்சரியகரமாக ஆட்டத்தை விட்டாலும் விடுவார், ஆகவே அவரைப்பற்றி நாம் எதையும் முன் கூட்டி தீர்மானிக்கவியலாது” என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இண்போவுக்குத் தெரிவித்துள்ளார்.

 

ஆதில் ஹுசைன் மேலும் கூறும்போது, டெஸ்ட் போட்டியிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார், ஒருநாள் கேப்டன்சியை திடீரென உதறினார், ஆகவே எதுவும் சொல்ல முடியாது என்றார்.

 

மேலும் அவர் தோனியின் பழைய பேட்டிங் குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்கு பேசிய போது, “அவர் எப்போதும் பேட்டிங் உத்தி பற்றி கவலைப்பட்டவர் இல்லை. ஜூனியர் வீரராக இருக்கும் போதே தான் எப்படிப் பேட்டிங் செய்வார் என்பதை மூத்த வீரர்களுக்கு தெரியப்படுத்தினார். ஷீஷ் மஹல் டிராபியில் டி.குமரன், தெபாஷிஷ் மொஹாண்டி ஆகிய பவுலர்களை வெளுத்து வாங்கி சிக்சர்கள விளாசினார், சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பே தோனி ஒரு ஸ்டார்தான் ஏனெனில் அவரது சிக்சர்களைப் பார்க்கவென்றே தனி ரசிகர் கூட்டம் அப்போதே உண்டு. டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் ஏகப்பட்ட சிக்சர்களை அடித்து அப்பகுதியில் அவர் ஒரு ஸ்டாராகத் திகழ்ந்தார்” என்றார்.

 

 2013-ல் ராஞ்சி தன் முதல் சர்வதேச கிரிக்கெட்டை நடத்திய போது தோனி கூறியதாவது, “நான் இங்குதான் வளர்ச்சி பெற்றேன். இங்கு நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறேன், 40,000 பேர் இன்று பார்க்கின்றனர், ஆனால் அன்று டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடும்போதே 15,000 ரசிகர்கள் முன்னிலையில் ஆடியுள்ளேன்” என்று தோனி கூறியது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x