Published : 30 Mar 2019 06:50 PM
Last Updated : 30 Mar 2019 06:50 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய கிறிஸ் கெய்ல்

சண்டிகரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

 

கிங்ஸ் லெவன் அணியில் அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 39பந்துகளில் 6 நான்குகள் 2 ஆறுகள் வீதம் 60 ரன்களை எடுத்தார், கிங்ஸ் லெவன் தரப்பில் வருண் சக்ரவர்த்திக்குப் பதில் எடுக்கப்பட்ட தமிழக லெக்ஸ்பின்னர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ரவி அஸ்வின் 4 ஒவர் 26 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். ஷமி, விலோயென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இலக்கை விரட்டக் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ராகுலும், கெய்லும் இறங்கினர்.  இதில் கிறிஸ் கெய்ல் கொஞ்சம் நிதானம் காட்டி பிறகு வெளுத்துக் கட்டத் தொடங்கினார்.

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிட்செல் மெக்லினாகன் வீசிய போது அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெய்ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 300 சிக்சர்களை அடித்த முதல் வீரர் ஆனார்.

 

2 சிக்சர்களும் லாங் ஆன் திசையிலேயே அடிக்கப்பட்டது. பிறகு ஹர்திக் பாண்டியாவையும் டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்சரையும், நேராக சைட் ஸ்க்ரீனுக்கு மேல் ஒரு சிக்சரையும் அடித்து 24 பந்துகளில் 3 நான்குகள் 4 ஆறுகள் என்று அபாயகரமாகச் சென்று கொண்டிருந்த போது குருணால் பாண்டியா பந்தை தூக்கி அடித்து டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார், கேட்ச் எடுத்தது சகோதரர் ஹர்திக் பாண்டியா.

 

தற்போது ராகுல் 17 ரன்களுடனும் அகர்வால் 14 ரன்களுடனும் ஆடிவர 9 ஓவர்களில் மும்பை அணி 73 ரன்களுக்கு 1 விக்கெட்.  வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 9.45.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x