11 கோலிகள், 11 டெண்டுல்கர்கள், 11 பிராட்மேன்களையா ஓர் அணியில் வைத்திருக்க முடியும்?: விமர்சகர்களுக்கு முத்தையா முரளிதரன் சாட்டையடி

11 கோலிகள், 11 டெண்டுல்கர்கள், 11 பிராட்மேன்களையா ஓர் அணியில் வைத்திருக்க முடியும்?: விமர்சகர்களுக்கு முத்தையா முரளிதரன் சாட்டையடி
Updated on
1 min read

ஆஸ்த்ரேலியாவுக்கு எதிரான 2 பெரிய ஸ்கோர் போட்டிகளில் இந்திய அணி தோல்வி தழுவி தொடர் 2-2 என்று சமநிலையில் உள்ளதையடுத்து இந்திய அணி மீது கேள்விகளும் விமர்சனங்களும் பெருக, இலங்கை முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் முரளிதரன் இந்திய அணிக்கு ஆதரவாகத்  தன் குரலை எழுப்பியுள்ளார்.

எந்த அணியிலும் 11 மேட்ச் வின்னர்கள் இருக்க முடியாது ஆகவே இந்திய அணியிடம் சற்று பொறுமை கடைபிடியுங்கள் என்று ஐ.ஏ.என்.எஸ்-இடம் பேசிய முரளிதரன் கூறியுள்ளார்.

“நாம் பொறுமைதான் காக்க வேண்டும். இந்திய அணி நன்றாகவே ஆடிவருகின்றனர். உலகக்கோப்பைக்காக சிலபல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றியின் பாதையில் சிலபல தோல்விகள் ஏற்படவே செய்யும். ஏனெனில் 11 விராட் கோலிகளைக் கொண்டா ஆட முடியும். ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னராக இருக்க முடியாது.

சில போட்டிகளில் வெல்வோம், சில போட்டிகளில் தோல்விகள் தவிர்க்க முடியாதது. இல்லையெனில் ஒவ்வொரு அணியிலும் 11 விராட் கோலிகள், 11 சச்சின் டெண்டுல்கர்கள் 11 டான் பிராட்மேன்கள் தான் ஆட வேண்டும். இது சாத்தியமில்லை.

ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும். இந்திய அணி நன்றாக ஆடிவருகின்றனர், அவர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்றக்கூடாது. வீரர்களிடமிருந்து அழுத்தத்தை அகற்ற வேண்டும், அப்போதுதான் அவர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியும், விரும்பத்தகுந்த முடிவுகளைக் கொண்டு வர முடியும்.” என்றார் முரளிதரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in