Published : 31 Mar 2019 08:29 PM
Last Updated : 31 Mar 2019 08:29 PM

டேவிட் வார்னர் - பேர்ஸ்டோ பேட்டிங்கைப் பார்ப்பது... : சச்சின் டெண்டுல்கர் உற்சாகம்

ஆர்சிபி அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இன்று டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் சதம் அடிக்க 231/2 என்று இமாலய ஸ்கோரை எட்டியது.

 

தொடர்ந்து ஆடிய ஆர்சிபி ஒரு நேரத்தில் 35/6 என்று 50க்குள் கதை முடியும் என்று இருந்தது, ஆனால் 113 ரன்களுக்குச் சுருண்டது.

 

இதில் ஆர்சிபியின் பந்து வீச்சையும் கோலியின் முதிர்ச்சியற்ற கேப்டன்சியும் பட்டவர்த்தமானது, தொடக்கத்தில் வார்னருக்கு ஸ்பின்னரைக் கொண்டு வந்தால் என்ன ஆகும் என்பது ஏற்கெனவே புள்ளிவிவரங்களில் உள்ளது, வர்ணனையாளர்களுக்குத் தெரிந்தது ஆடும் கேப்டனுக்கும் தெரியவில்லை, பயிற்சியாளருக்கும் தெரியவில்லை.

 

இதனையடுத்து வார்னர், பேர்ஸ்டோ பிரித்து மேய்ந்தனர். 56 பந்துகளில் 12 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 114 ரன்கள் எடுக்க வார்னர் 55 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என்று 100 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து ஐபிஎல் சாதனையாக 3வது முறையாக தொடர்ச்சியாக 185 ரன்கள் என்ற சதக்கூட்டணி அமைத்தனர்.

 

இவர்கள் இன்னிங்ஸ் அபாரமான கிரிக்கெட்டிங் ஷாட்களுடன் விக்கெட்டுகளுக்கு இடையே இந்த உஷ்ணத்திலும் கடுமையாக, வேகமாக ஓடி சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்ததுமாக அமைந்தது, இதனை சரியாகப் பிடித்த லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் உடனடியாக,

 

“பேர்ஸ்டோ, வார்னர் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களது கூட்டணி ரன் சேர்ப்பு பற்றி அனைத்தையும் கூற வேண்டும். அசாதாரணமான கூட்டணி. சில சீரியஸான ஷாட்கள், விக்கெட்டுகளுக்கு இடையே இந்த ஹீட்டிலும் கடினமாக ஓடியது.  உண்மையில் குறிப்பிடத்தகுந்தது” என்று ட்வீட்டில் புகழாரம் சூட்டியுள்ளதோடு வார்னர், பேர்ஸ்டோ ஸ்ட்ரோக் ஆடும் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x