Published : 27 Mar 2019 07:15 PM
Last Updated : 27 Mar 2019 07:15 PM

இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் சிஎஸ்கே விரட்டத் திண்டாடியிருக்கும்: ரிக்கி பாண்டிங் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் 20 ரன்களைக் கூடுதலாக எடுத்திருந்தால் அந்த அணி இலக்கை விரட்ட திண்டாடியிருக்கும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

 

15 ஓவர்களில் 118/2 என்று இருந்த டெல்லி கேப்பிடல்ச் 147 ரன்களுக்கு குறுக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் ப்ளேயில் ஷேன் வாட்சனின் அதிரடி ஆட்டத்தில் 58 ரன்களை எடுத்தது வெற்றியை எளிதாக்கியது.

 

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் கூறும்போது, “பேட்டிங் கடைசியில் கடினமானது. பவர் ப்ளேயில் அவ்வளவு ரன்களைக் கொடுத்திருக்கா விட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் உண்மையில் இலக்கை எட்ட திண்டாடியிருக்கும். இங்கு எங்கள் சராசரி ஸ்கோர் 165 ரன்கள். கடந்த ஆண்டு எங்கள் சராசரி ஸ்கோர் இதே மைதானத்தில் 190.

 

ஆகவே குறைந்தது 165 ரன்களை எடுத்திருந்தோமானால் நிச்சயம் சிஎஸ்கே விரட்டலில் திணறியே இருக்கும்.

 

மேலும் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது பிரச்சினையில்லை, மும்பையில் முதலில் பேட் செய்துதான் வென்றோம். டாஸின் போதே தோனி நிச்சயம் அவர்கள் முதலி பந்து வீசுவதையே விரும்புவார்கள் என்று கூறுவார் என்று யோசித்தோம். அவரவர் அணிக்கு எது சிறந்ததோ அதையே செய்ய விரும்புவார்கள். ஆதலால் முதலில் பேட்டிங் பற்றி கவலையில்லை.

 

அடுத்து வரும் போட்டிகளில் இத்தகைய ஆட்டக்களங்களில் எப்படி பேட் செய்வது என்பதை பற்றி விவாதித்து முடிவெடுப்போம்.  பிட்ச் தொடர் முழுதும் இப்படித்தான் இருக்கும், நாங்கள் தான் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து பேட் செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x